முக்கொம்பில் மூழ்கி  ஸ்ரீரங்கம் கல்லூரி மாணவர் பலியானார்!

0
நம்ம திருச்சி-1

முக்கொம்பில் மூழ்கி  ஸ்ரீரங்கம்கல்லூரி மாணவர் பலியானார்.

 

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் யுவன்(வயது 18). இவர், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மதியம் தனது கல்லூரி நண்பர்கள் 12 பேருடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு வந்தார்.

அங்கு சந்தோஷமாக பொழுதை கழித்த அவர்கள், காவிரி ஆற்றில் குட்டை போல தேங்கி நின்ற தண்ணீரில் இறங்கி குளிக்க ஆசைப்பட்டனர். அதன்படி, தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது யுவனும், வெங்கடேசனும் தண்ணீரில் மூழ்கினர். வெங்கடேசன் தண்ணீரில் தத்தளித்ததால் அவரை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.