ஸ்ரீரங்கத்தில் அஞ்சலி!

மௌனமாக நடைபெற்றது.

0
நம்ம திருச்சி-1


கடந்த 14ஆம் தேதி காஷ்மீர் புல்வாமா பகுதியில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டார்கள். இதில் 41 ராணுவ வீரர்கள் உடல் சிதறி வீரமரணம் அடைந்தார்கள்.இந்த செயலை கண்டு நாடே கண்ணீரில் மூழ்கியது உள்ளது.உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இன்று (17.2. 2019)திருச்சி ஸ்ரீரங்கத்தில் மௌன அஞ்சலி பேரணி நடைபெற்றது.ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், பொதுமக்கள் சார்பாக ஏராளமானோர் சாதி வேறுபாடுகள் இன்றியும், கட்சிகள் வேறுபாடு இன்றியும், அனைவரும் பங்கேற்றார்கள். ஸ்ரீரங்கம் ரெங்கா ரெங்கா கோபுரத்தில் தொடங்கி சித்திரை வீதி நான்கு தெருக்கள் வழியாக ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் மவுனமாக பேரணி நிறைவு பெற்றது. பின்னர் ராஜகோபுர முன்பாக வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களின் புகைப்படம் பதித்த பேனர் மீது அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.