மார்ச் 8ம் தேதி மகளிருக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்

0
நம்ம திருச்சி-1

மார்ச் 8ம் தேதி  திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்

மகளிருக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற 08.03.2019 அன்று மகளிருக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசுதெரிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 08.03.2019 வெள்ளிக்கிழமை அன்று தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில்  10 மற்றும் 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, மற்றும்  Any Degree, M.B.A., b.e., & B.Tech படித்தவர்களும் (வயது வரம்பு : 18-க்கு மேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம்.

மேற்படி இந்நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (TC,   Marksheet,  Ration card, Adhar Card) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்  கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை தவறவிடாமல் 08.03.2019 வெள்ளி அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருச்சிக்கு நேரில் ஆஜராகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசுதெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.