மாவட்ட மைய நூலகத்தில் மூத்தோர் முற்றம் நிகழ்ச்சி

0
ntrichy

 

மாவட்ட மைய நூலகத்தில் மூத்தோர் முற்றம் நிகழ்ச்சி

 

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து மாதந்தோறும் மூன்றாவது புதன்கிழமை “மூத்தோர் முற்றம்” என்ற நிகழ்ச்சி மூத்த குடிமக்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது.

வருகின்ற 20.06.2018 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு மூத்தோர் முற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா யோகா பயிற்சி மையத்தை சார்ந்த ஸ்ரீதர் மற்றும் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் “நலம்தானா” எனும் தலைப்பில்; சிறப்புரையாற்ற உள்ளார்கள். எந்தப் பருவத்திலும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மூத்தோர் மட்டும்மின்றி அனைவரும்; கலந்து கொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

 

 

Leave A Reply

Your email address will not be published.