சாருபாலாவுக்காக தேர்தல் களத்தில் கலக்கும் மூத்த காங்கிரஸ் எம்.பி மகன் !

0
ntrichy

சாருபாலாவுக்காக தேர்தல் களத்தில் கலக்கும்  மூத்த காங்கிரஸ் எம்.பி மகன் !

 

திருச்சி எம்.பி. தொகுதியில்,  அமமுக வேட்பாளர் சாருபா தொண்டைமானை ஜெயிக்க வைப்பதற்காக புதுக்கோட்டை முன்னாள் எம்.பி.,யின் மகன் களத்தில்  இறங்கியுள்ளார்.

யார் இந்த ராஜா சுந்தர் ராஜ் ?

நா. சுந்தர்ராஜ் புதுக்கோட்டை மாவட்டம், காட்டுப்பட்டி சேர்ந்தவர் இவர்  தமிழக எம்.பியும் புதுக்கோட்டை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் மூன்று முறை புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார். இவர் எட்டாவது மக்களவை (1984-89), ஒன்பதாவது மக்களவை (1989 – 91), பத்தாவது மக்களவை (1991 – 94) உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் இவர் திருமையம் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறையும் இருந்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 இல் திருமெய்யம் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 இல் இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இவருடைய அப்பா காட்டுபட்டி ராமையாக ( இவர் ராஜா சுந்தர் ராஜின் தாத்தா )  இவர் காட்டுபட்டி ராமையா என்று அழைப்பார்கள் இவர் இரண்டு முறை எம்.பியாகவும், இரண்டு முறை அமைச்சராகவும் இருந்து செல்வாக்கோடு அந்த பகுதியில்  வலம் வந்தவர்கள் என்பது குறிப்பிட்ட தக்கது. இப்படி புதுக்கோட்டை பகுதியில்  மிகமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இவருடைய குடும்பம் தற்போது புதுக்கோட்டை இராஜகோபாலபுரம் வசிக்கிறார்கள்.

இவருக்கு இராதா, இராஜா சுந்தர்ராஜ்  இரண்டு குழந்தைகள் இதில் ராஜா சுந்தராஜன் இளம் வயதிலே அரசியலில் ஆர்வம் உள்ளவர். மூப்பனார். எம்.நடராஜன், சசிகலாவுக்கும், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் ஆகியோரிடம் நெருக்கமானவர்கள் இளைஞர் காங்கிரசில் பொறுப்புகளில் வகித்தவர். இவர் புதுக்கோட்டையில் திருநாவுக்கரசு வீட்டிற்கு அடுத்த வீடு ராஜா சுந்தர்ராஜ் வீடு இருக்கிறது என்பதால் கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டு  திருச்சி எம்.பி தொகுதியில், அ.ம.மு.க., வேட்பாளராக போட்டியிடும் சாருபாலா, பரிசு பொட்டி சின்னம் கிடைப்பதற்கு முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தில் உடன் இருந்து மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், புறநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் ஆகியோரும் இணைந்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரச்சாரத்திற்கு பின்னணயில் இருந்து ஆட்களை திரட்டுவதும், கட்சியில் தொய்வு எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்து அதை சரி செய்யும் வேலையிலும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறராம். சமீபத்தில்  திருச்சி ரோமன் கத்தோலிக் ஆயரை சந்தித்து  அமமுக வேட்பாளர் சாருபாலா திரும்பிய போது மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் உடன் சென்றிருந்தார் ராஜா சுந்தர்ராஜனும்  அப்போது அங்கே பிஷப்பை பார்க்க வந்திருந்த  திருநாவுக்கரசர் ராஜேஷ் சுந்தர் ராஜவை பார்த்ததும் தம்பி உன்னோட அப்பா ஜெயிக்க உடன் இருந்து நான வேலை செய்தேன். இப்போ நீங்க அந்த பக்கம் இருக்கீங்க… வாழ்த்துக்கள் சொல்லி குறைந்த தொனியில் சொல்லிவிட்டு சென்றாராம்.

திருச்சி சாருபாலவுக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் பரிசு பொட்டி சின்னம் கிடைத்ததும். ஓட்டி மிஷினில் இரண்டாவது பெட்டியில் முதல் இடத்தில் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சியில் ராஜா சுந்தராஜனும் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசனின் பங்கு மிக முக்கியமானது என்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், மனோகரன் பரணி கார்த்தி ஆகியோருடன் இணைந்து ராஜா சுந்தர்ராஜன் தேர்தல் பணி செய்வது கூடுதல் பலம் என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் பாரம்பரியமாக காங்கிரஸ்காரக இருந்த எம்.பி.சுந்தர்ராஜனின் மகன் ராஜாசுக்கு எல்லா களப்பணியும் தெரியும் என்பதாலும் அவருடைய தொடர்ச்சியான பணி புதுக்கோட்டையிலும், திருச்சியிலும் ஆரம்ப முதல் தொடர்ச்சியாக இருப்பது வேட்பாளர்  சாருபாலா வெற்றிக்கு கூடுதல் பலமாக இருக்கும் அமமுகவி தொண்டர்கள் பக்கம் சந்தோஷமாக  குரல் கேட்க துவங்கியுள்ளது.  என்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.