வாகாரிநதியை புத்துயிரூட்ட ரூ.415 கோடிநிதி ஒதுக்கீடு

0
நம்ம திருச்சி-1

நதிகளைமீட்போம்இயக்கத்தின்உதவியுடன்

வாகாரிநதியைபுத்துயிரூட்ட ரூ.415 கோடிநிதிஒதுக்கீடு

மஹாராஷ்ட்ராஅமைச்சரவைஒப்புதல்வழங்கியது

ஈஷா அறக்கட்டளையின் நதிகளைமீட்போம் இயக்கத்தின் உதவியுடன் வாகாரி நதியை புத்துயிரூட்டும் திட்டத்துக்கு மஹாராஷ்ட்ரா மாநிலஅமைச்சரவை ஒப்புதல் வழங்கி  ரூ.415 கோடிநிதி ஒதுக்கி உள்ளது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த நதிகளைமீட்போம் இயக்க உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தொழில் நுட்ப வல்லுனர்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவையும் அமைத்துள்ளது.

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகம் நிகழும் யவத்மால் பகுதியில் உள்ள வாகாரி நதியை புத்துயிரூட்டுவதற்கு ஈஷாஅறக்கட்டளையின் நதிகளைமீட்போம் இயக்கத்துடன் மஹாராஷ்ட்ரா மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், நதிகளை மீட்போம் இயக்க நிபுணர்குழுவினர் வாகாரிநதியை மீட்டு புத்துயிரூட்டுவதற்காக ஒருவிரிவான செயல்திட்ட அறிக்கையை தயாரித்து மஹாராஷ்ட்ரா மாநில அரசிடம் வழங்கினர்.

இந்நிலையில், இந்த திட்டத்துக்கு மஹாராஷ்ட்ரா மாநிலஅமைச்சரவை கடந்த 5-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. மேலும், இத்திட்டத்தை நதிகளை மீட்போம் இயக்கத்தின் உதவியுடன் செயல்படுத்துவதற்காக அம்மாநில வேளாண் அமைச்சகத்துக்கு ரூ.415 கோடிநிதி ஒதுக்கியுள்ளது. அத்துடன் இதற்காக, நதிகளை மீட்போம் இயக்க உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தொழில் நுட்ப வல்லுனர்கள் அடங்கிய ஒரு சிறப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், நதிக்கரையோரங்களில் இருபுறங்களிலும் மரம் நடுதல், நதிக்கரையோர விவசாயிகளிடத்தில் தங்களின் நிலங்களில் மண்வளத்தை அதிகரிக்கும் விதமாக ரசாயன விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறி, மரப்பயிர் வகை விவசாயத்தை மேற்கொள்வதற்கு வழிகாட்டுதல், தோட்டக்கலை விவசாயம், பழமரங்கள் மற்றும் மருத்துவ குணமிக்க மூலிகை மரப்பயிர் சாகுபடி, நுண்நீர் பாசன பயன்பாட்டுக்கான வழிமுறைகள், அரசாங்க நிலங்களில் பொதுமக்களின் மாபெரும் அளவிலான பங்களிப்போடு காடுகள் உருவாக்க திட்டம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாய பொருட்கள் உற்பத்தியை சிறப்பாக்கி சந்தைப்படுத்துவதற்கு துணைநிற்கும் வகையில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக சத்குரு பேசியபோது, “இந்தியாவில் வருத்தம் தரும் வகையில் அதிகப்படியான விவசாய தற்கொலைகள் அரங்கேறும் யவத்மால் பகுதியில் வாகாரிநதி புத்துயிராக்க திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் மகாராஷ்டிர அரசாங்கம் காட்டிய வேகமும் அர்ப்பணிப்பும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் திட்டம் நதியையும் நதியை சுற்றியுள்ள பல்லுயிர் சூழல் மண்டலத்தையும் மேம்படுத்துவதை மட்டும் குறிக்கோளாக கொண்டிராமல், விவசாயிகளின் வருமானத்தை பன்மடங்கு பெருக்கி அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கும் உத்வேகம் தருவதாக இருக்கும். வலுவான பொருளாதார முன்னேற்றத்திற்கான நீடித்த நிலைத்த விவசாய முறைக்கு ஒரு முன்மாதிரியாக இதனை நம்நாட்டிலும் இந்த உலகிலும் விளங்கச்செய்வதற்கு நாம் விரும்புகிறோம்” என்று கூறினார்

மேலும், இதுதொடர்பாகசத்குருஅவர்கள்தனதுட்விட்டர்பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில், ”நதிகள் மீட்பு இயக்கத்தின் பரிந்துரைப்படி வகாரி நதிக்கு புத்துயிரூட்டும்திட்டத்தைமகாராஷ்டிராஅமைச்சரவைஏற்றுக் கொண்டிருப்பதுஒருபுதியமைல்கல். சுற்றுச்சூழலும் பொருளாதாரமும் ஒருங்கேமேம்படமுடியும்என்பதற்குஒருமுன்மாதிரியாகஇதுஉருவெடுக்கும்” என்றுதெரிவித்துள்ளார்.

நதிகளைமீட்போம்இயக்கம்:

’நதிகளைமீட்போம்’ என்னும்தேசியஅளவிலானஇயக்கத்தைஈஷாஅறக்கட்டளை நிறுவனர்சத்குரு அவர்கள் 2017-ம் ஆண்டு செப்டம்பர்மாதம் தொடங்கிவைத்தார். வறண்டுவரும் இந்தியநதிகள் குறித்துவிழிப்புணர்வுஏற்படுத்துவதும், அவற்றை மீட்பதற்குமுழுமையானமற்றும்விரிவானதிட்டத்தை உருவாக்குவதும் இந்த இயக்கத்தின் பிரதானநோக்கங்கள்ஆகும்.

இதற்காக, ஈஷாஅறக்கட்டளைநிறுவனர்சத்குருஅவர்கள் 9,300 கி.மீதானேகார்ஓட்டிசென்றுநதிகள்மீட்புகுறித்துவிழிப்புணர்வுஏற்படுத்தினார்.அப்போது, ஒரேமாதத்தில் 16 மாநிலங்களுக்குசென்று 23 முக்கியநகரங்களில் 180 நிகழ்ச்சிகளில்பங்கேற்றார்.இந்நிகழ்ச்சிகளில் 13 மாநிலமுதல்வர்கள், அமைச்சர்கள், வணிகத்தலைவர்கள், விளையாட்டு மற்றும் சினிமாபிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள்பங்கேற்றனர். அத்துடன்உலகவரலாற்றில்முதல்முறையாக ‘நதிகளைமீட்போம்’ என்றமாபெரும்சுற்றுச்சூழல்இயக்கத்துக்குசுமார் 16.2 கோடிமக்கள் ‘மிஸ்டுகால்’ மூலம்ஆதரவுஅளித்தனர்.

இந்தஇயக்கத்தின்முயற்சிகளால்அச்சுமற்றும்தொலைக்காட்சிஊடகங்கள், சமூகஊடகங்கள், களவிழிப்புணர்வுகள்மூலம்நதிகள்மீட்புகுறித்தவிழிப்புணர்வுகோடிக்கணக்கானபொதுமக்களைசென்றுசேர்ந்தது. ஊடகங்கள், சமூகநலஅமைப்புகள், வணிகநிறுவனங்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசியல்தலைவர்கள்எனபலத்தரப்பினரும்இந்தவிழிப்புணர்வுபயணத்தில் பங்கெடுத்தனர்.

இதையடுத்து, இந்தியநதிகளைமீட்பதற்கானவழிமுறைகள்அடங்கியவிரிவானதிட்ட அறிக்கைஒன்றைதயாரித்து ‘நிதிஆயோக்’ அமைப்பிடம் வழங்கப்பட்டது. அதனைஏற்றுக்கொண்டநிதிஆயோக்அமைப்புஅதைஅமல்படுத்துமாறு அனைத்துமாநிலஅரசுகளுக்கும் 2018 ஜூன் 6-ம் தேதிபரிந்துரைஅளித்தது.

இதன்பிறகு, பல்வேறுமாநிலஅரசுகள்ஈஷாஅறக்கட்டளையுடன்புரிந்துணர்வுஒப்பந்தம் மேற்கொண்டன.திறமையும்ஆர்வமும்மிகுந்த 100 இளைஞர்கள் ‘நதிகளைமீட்போம்’இயக்கத்தில்முழுநேரதன்னார்வதொண்டர்களாக இணைந்துள்ளனர்.அவர்கள்நாடுமுழுவதும்பயணித்துஇத்திட்டத்தில் களப்பணியாற்றிவருகின்றனர்.

முதல்கட்டமாக, மஹாராஷ்ட்ராமாநிலத்தில்விவசாயிகள்தற்கொலைஅதிகம்நிகழும் விதர்பாமண்டலத்தில்உள்ள ’ ‘வாகாரி’ என்றநதியைமீட்டுபுத்துயிர்ஊட்டுவதற்கானபணிகள்நடைபெற்று வருகின்றன.

ஊடகதொடர்புக்கு: 9043597080, 6383125184

Leave A Reply

Your email address will not be published.