திருச்சி விமானநிலையத்தில் தஞ்சை பயணியிடம் ரூ.3.73லட்சம் தங்கம் பறிமுதல்

0
ntrichy

திருச்சி, ஜூன் 16: திருச்சி விமானநிலையத்தில் தஞ்சை பயணியிடம் ரூ.3.73லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
துபாயில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு திருச்சி வந்த ஏர்இந்தியா விமான பயணி களிடம் சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சையை சேர்ந்த சதாம்உசேன் என்பவரிடம் சோதனை செய்ததில், அவர் கழுத்தில் அணிந்து மறைத்து எடுத்து வந்த ரூ.3.73 லட்சம் மதிப்பிலான 120 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் சதாம்உசேனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.