மத குருமார்கள் போராட்டத்தினால் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் கே.என்.நேரு பேச்சு

0
ntrichy

Image result for கே.என்.நேருமத்திய பேருந்து நிலையம் அருகே கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் செங்கல்பட்டு  பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்திற்கு எதிராக தொடரும் நடவடிக்கைகளை கண்டித்து திருச்சி பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் “60 ஆண்டுகளுக்கு முன்பே தொழுநோயாளிகளுக்கு உதவியாக இருந்தவர்கள் கிறிஸ்தவர்கள். கிராமப்புறங்களில் முதன்முதலில் கல்வி, மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லம் என மக்கள் பணிகளில் ஈடுபட்டவர்கள் கிறிஸ்தவர்கள். பிரச்னை காலத்தில் மட்டுமல்லாமல் என்றைக்கும் கிறிஸ்துவ மக்களுக்கு தி.மு.க.துணையாக நிற்கும்” என்றார்.

மேலும், இன்றைய ஆட்சியாளர்கள் கழுத்திற்கு மேல் கத்தியை தொங்கவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். புதுக்கட்சி துவங்கிய நடிகர்கள் இதுபற்றி பேசுவது இல்லை.

1991-1996-ல் மத குருமார்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போதும் மதகுருமார்கள்  போராட்டம் நடத்த வந்திருப்பதால் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி (சிறுபான்மைத்துறை) திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் அப்துல்குத்தூஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.