Modern technology gives us many things.

திருச்சியில் கலாமிற்கு கோயில் கட்டிய புஷ்பராஜ்

0 5,492
RTI

தில்லைநகர் 10 விஸ்தரிப்பு சாலையில் கலாமிற்காக ஒரு கோயிலை கட்டிய புஷ்பராஜ் உடன் என்திருச்சி ஆசிரியர்.

2020-ல் இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாறும் என்று அப்துல்கலாம் அதற்கான பல முன்முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதனைநனவாக்கும் முயற்சியில் இன்றும் பல இளைஞர்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் புஷ்பராஜ் அவருக்காக ஒரு கோயிலைக்கட்டியதுடன் அவரது கொள்கைகளை பள்ளிகளிலும் பரப்பி வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு

எப்படி உங்களுக்கு இந்த எண்ணம் தோன்றியது?

Farm land sale

2020 வல்லரசு நாடாவதற்கு எல்லா வகையிலும் பாடுபட்ட டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம்.  எல்லோரின் கனவு நாயகன். இப்போது நாம், நமக்கு மிகவும் பிடித்தவர்களுக்காக, என்ன வேண்டுமானாலும் செய்வோம் இல்லையா? அதுமாதிரித்தான் நான் இந்த கோயிலை 2016-ல் கட்டினேன்.

அந்த சிலையின் அமைப்பைப் பற்றி?

12அடி உயரம் 3 அடி அகலம் ஒன்றரை அடி மார்பளவு சிலை. அதன் கீழ் நமது தலைமுறையின் உயிர்நாடி தண்ணீர், மரம்.  நமக்கு கிடைத்த  வரம்.  காப்பாற்றலாமே என சிலைக்கு கீழ் எழுதப்பட்டுள்ளது.

அக்னிசிறகுகளின் தாக்கம் குறித்து?

8 வருடங்களுக்கு முன் அவரது அக்னி சிறகுகள் புத்தகம் படித்தேன். அந்த புத்தகத்தில் கனவுகாணுங்கள் என்று அவர் கூறி இருப்பதை நான் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டு நிஜவடிவம் கொடுக்க நினைத்து இலக்கு 1000 கோடி என நிர்ணயம் செய்து கொண்டு ஒரு கம்பெனியை உருவாக்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

இந்த கோவிலை இதுவரை எத்தனை பேர் பார்த்திருப்பர்?

Gold

இந்த வழியை கடக்கும் எல்லோரும் நின்று வணங்கிவிட்டு செல்கின்றனர்.  சுமார் 1 லட்சம் பேர் பார்த்திருப்பர். ஊதுபத்தி ஏற்றி கலாமை வழிபட்டு செல்கின்றனர்.

வேறு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

விஷன் 2020. இப்போதெல்லாம் வெளி நாடுகளில் இந்தியாவை பற்றி பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். ஏனெனில் இந்தியா இப்போது அப்துல்கலாமின் கனவை நனவாக்கும் முயற்சியை முன்னெடுத்து முன்னேறி வருகிறது. அந்த வகையில் நான் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று, குழந்தைகளிடம்  கார்டு ஒன்றை கொடுத்து வருகிறேன். அதில் ”மை கோல்” என்ற எழுதப்பட்டிருக்கும். அதில் உங்களது எதிர்கால திட்டம் பற்றி குறிப்பிடச்சொல்வேன்.  துளசி விதைகளை கொடுத்து வருகிறேன். ”கேட்டுத்தான் பாரேன்” என்பதை தாரக மந்திரமாக குழந்தைகளிடம் சொல்லி வருகிறேன். தெரியாததை தெரிந்து கொள்வதற்கு இந்த வார்த்தையை உபயோகப்படுத்துங்கள். அப்போதுதான் நாம் முன்னேறுவோம். நம் இலக்கை அடைவோம் என்று சொல்லி வருகிறேன்.

இறுதியாக மக்களுக்காக ஏதாவது சொல்லுங்களேன்?

ஒவ்வொருவரும் கோல் செட் பண்ணுங்கள். அதற்கான தேதியைக் கூட நிர்ணயம் செய்யுங்கள். அதற்கான முயற்சியில் இடைவிடாது உங்களை அர்ப்பணித்துக்கொள்ளுங்கள். உங்கள் முயற்சியால் இந்த பிரபஞ்சம் அச்சு அசலாக ஒரு பிசிறு இல்லாமல் உங்கள் கோலை செயல்படுத்திவிடும். போக வேண்டிய இலக்கை அடைந்து விடுவோம்.

இப்போது இருக்கும் நிலைக்கு நன்றி சொல்லுங்கள். போக வேண்டிய இடத்திற்கு முயற்சியை முழு மனதுடன் மேற்கொள்ளுங்கள் கண்டிப்பாக அடைவீர்கள் என்கிறார்.

பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற பொன்மொழியுடன் அவரிடமிருந்து நட்புடன் விடைபெறுகிறோம்.

வெற்றிச்செல்வன்

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!