மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதிமுக செயல் தலைவர்

0
நம்ம திருச்சி-1

தந்தையின் அரசியல் பணிகள் காரணமாக, ஸ்டாலினுக்கு இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தார்.

ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975 இல் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின்.

2017 சனவரியில் திமுகவின் செயல் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.