பிரார்த்தனை

0
நம்ம திருச்சி-1

பழுத்த ஞானியாகிய ராபியா அம்மையார் நோய்வாய்ப்பட்டு படுத்திருந்தார்,

 

முகமதியர்களின் மதிப்பிற்குரிய புனித மாலிக்கும்,அறிஞர் ஹசனும் அவரைப் பார்க்க வந்திருந்தனர்..

 

“தூய முறையில் பிரார்த்தனை செய்பவர்கள்,இறைவன் நல்கும் துயரத்தைச் சகித்துக் கொள்வார்கள்”  என்றார் ஹசன்…

 

இன்னும் ஆழ்ந்த கருத்தப்பட்ட தன் அனுபவத்தை மாலிக் கூறினார்,

 

“இறைவன் கொடுப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்பவர்கள்,அவர் கொடுக்கும் தண்டனையையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள்”என்றார்…

 

இவர்கள் இருவர் கருத்திலும் சுயநலம் இருப்பதை கண்ட ராபியா..

 

“அருளாளர்களே,இறைவனின் திருமுகத்தைக் காணும் பேறு பெற்றவர்களுக்கு தாம் தண்டிக்கப்படுவது போன்ற உணர்வே இருக்காது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.