குற்றத்தை தடுக்க மக்களே உஷாராய் இருங்க- மாநகர எஸ்பி

0
ntrichy

குற்றங்களை தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மாநகர எஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.

வெளியூருக்கு சில நாட்கள் சுற்றுலா செல்லும்போது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்லவேண்டும் எனவும். சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் வீட்டருகில் தென்பட்டால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்கவும்.

இரவில் பெண்கள் வெளியில் செல்லும்போது நகைகளை பாதுகாப்பாக மறைத்துக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், கோடைகாலத்தில் வீட்டை, ஜன்னல்களை திறந்து வைத்துக்கொண்டு இரவில் தூங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

கதவைத் தட்டினாலோ, காலிங்பெல் சத்தம் கேட்டாலோ ஜன்னல் வழியாக யார் என்று பார்த்தபின் கதவை திறக்கவும்.

இரவில் வீட்டின் சுற்றுப்புறங்களில் மின்விளக்குகளை எரிய விட வேண்டும் எனவும் அவர் தனது செய்திக்குறிப்பில் அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.