புதிய பென்சன் மற்றும் வருங்கால வைப்பு நிதி- ஊழியர்கள் அச்சம்

0
நம்ம திருச்சி-1

புதிய பென்சன் மற்றும் வருங்கால வைப்பு நிதி குறித்து ஊழியர்களுக்கு எழுந்துள்ள அச்சத்தை அரசு போக்க வேண்டும்

 

புதிய பென்சன் மற்றும் வருங்கால வைப்பு நிதி குறித்து ஊழியர்களின் அச்சம் நீங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப்பொதுச்செயலாளர் மனோகரன் வலியுறுத்துகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இப்பதாவது,

தனியார் நிருவன ஊழியர்களின் பென்சன் நிதியை கையாள எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ புருடன்சியல், கோடக் மகேந்திரா, ஆயுள் காப்பீட்டு கழகம், ரிலையன்ஸ், ஸ்டேட் வங்கி பென்சன் நிதியமைப்பு, யூனிட் ட்ரஸ்ட் ஆப் இந்தியா, பிர்லா சன்லைப் மேனேஜ்மணட் என எட்டு நிருவனங்களையும்அரசு ஊழியர்கள் பென்சன் நிதியை கையாள ஆயுள் காப்பீட்டு கழகம், ஸ்டேட் வங்கி பென்சன் நிதியமைப்பு மற்றும் யூனிட் ட்ரஸ்ட் ஆப் இந்தியாவையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம்  அங்கிகரித்து இருக்கிறது. இந்த நிருவனங்கள் பென்சன் நிதியை பங்கு சந்தைகளில்முதலீடு செய்கின்றன.

உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதிச் சேவை(ஐ.எல்.&எப். எஸ்)என்ற நிருவனம். “ஏஏஏ”அந்தஸ்த்து பெற்றது.போக்குவரத்து, கட்டுமாணம், நிதியுதவி, பிரிவுகளில் முதலீடு செய்யும் நிழல் வங்கிஅமைப்பு. இதன் சொத்து மதிப்பு 8 லட்சம் கோடி. பென்சன் நிதி அதிகம் முதலீடு செய்யப்பட்ட நிருவனங்களில் இதுவும் ஒன்று.

இந்த நிருவனம்அரசு மற்றும் தனியார் சார்ந்த 302 நிருவனங்களில் முதலீடு செய்துஉள்ளது. அதில் 169-இந்திய நிருவனங்கள், 133-வெளிநாட்டு நிருவனங்கள்.  22 நிருவனங்கள் அரோக்கியமான நிதி நிலையிலும், 10 நிருவனங்கள் சுமாரான நிதி நிலையிலும், 38 நிருவனங்கள் திவால் நிலையிலும் உள்ளன. மற்ற99 இந்திய நிருவனங்களின் நிதித் தகுதி ஆய்வில் உள்ளது. இந்த நிருவனத்தின் கடன் சுமை ரூ.91000 கோடி. இதன் உயர் அதிகாரிகள் பலர் சில மாதங்களுக்கு முன் பதவி விலகி விட்டனர்.

திவாலான நிருவனங்களில் பல தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் திவால் நோட்டிஸ்வழங்கி இருக்கின்றன. தொழிற்சாலை வளர்ச்சி வங்கி, ஸ்டேட் வங்கி உட்பட பல நிருவனங்கள் இந்த வழக்கில் குறுக்கிட தீர்ப்பாயத்தை அனுகி இருக்கின்றன.

அரசு ஊழியர்களின் ஓய்வு ஊதிய நிதியை கையாளும் ஆயுள் காப்பீட்டு கழகம் 25.34 சதவீத பங்குகளையும், ஸ்டேட் வங்கி 6.42  சதவீத பங்குகளையும், யூனிட் ட்ரஸ்ட் ஆப் இந்தியா  0.8 சதவீத பங்குகளையும்இந்த ஐ.எல் &எப்.எஸ் நிருவனத்தில் வைத்து இருக்கின்றன. மேலும் மத்திய தொழிலாளர் சேம நலநிதி அமைப்பு ரூ.570 கோடிக்கு பங்குகளில்முதலீடு செய்து இருக்கிறது. தற்போது இந்த அமைப்பு நிதி மற்றும் பெருநிருவன விவகார அமைச்சகங்களிடம் உதவி கோரிகடிதம் எழுதி இருக்கிறது.

ஐ.எல்&எப்.எஸ் நிருவன வர்த்தக சரிவு, அதன் 38 முதலீட்டு நிருவனங்களின் திவால் நிலை மத்திய, மாநில அரசு ஊழியர்களின் புதிய பென்சன் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான ஆபத்தாக மாறி இருக்கிறது. ஊழியர்கள் அச்சம் நீங்கமத்திய அரசின் உரிய நடவடிக்கை தேவை என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்துகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.