திருச்சி பாலக்கரையில் ஆண் குழந்தை மீட்பு தகவல் தெரிவிக்க அழைப்பு

0
ntrichy

பாலக்கரையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை குறித்து தகவல் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: திருச்சி பாலக்கரை பகுதியில் கடந்த 28.3.2018ம் தேதி ஆண் குழந்தையை பாலக்கரை போலீசார் மீட்டனர். அந்த குழந்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் பெற்றோரினால் கைவிடப்பட்ட, (ஆதரவற்ற நிலையில் பெறப்பட்ட) பிறந்த ஆண் குழந்தைக்கு குழந்தை அருள் என பெயரிடப்பட்டு திருச்சி மாவட்ட சமூகநல அலுவலரின் உத்தரவின் அடிப்படையில், சேலம் குழந்தைகள் நலக் குழு முன் ஆஜர்படுத்தப்பட்டு, தற்காலிக வைப்பு ஆணை பெறப்பட்டு, சேலம் லைப்லைன் டிரஸ்ட் தத்துவள மையத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பினை காண்பவர்கள் இக்குழந்தையைப் பற்றிய விபரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் 7 நாட்களுக்குள் திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக் குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவ்வாறு தகவல் தெரிவிக்காவிடில் இக்குழந்தையை சட்டப்படியாக தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும். இவ்வாறு திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார். குழந்தை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தலைவர்/உறுப்பினர்கள் குழந்தைகள் நலக்குழு, அரசு கூர்நோக்கு இல்லம், இ.பி.ரோடு, திருச்சி. செல்: 9942276404 மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, ரேஸ்கோர்ஸ் ரோடு, காஜாமலை, திருச்சி. செல்:9047283819 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.