விசி நிர்வாகிகள் கூட்டம்

0
ntrichy

மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே உள்ள பயணியர் விடுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் நகர, ஒன்றிய, நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்தழகன் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் சக்தி (எ) ஆற்றலரசு வரவேற்புரையாற்றினார். வட்ட துணைச் செயலாளர் ஷாஜகான், நகரச் செயலாளர் சத்தியசீலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன், செங்கதிர் செந்தில், (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அச்சு ஊடக மையப் பிரிவின் மாநில செயலாளர் ரமேஷ்குமார் நிர்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசினார். தென்சென்னை மாவட்ட செயலாளர் புதியவன் , பாராளுமன்ற தொகுதி துணை செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர். ஒன்றிய துணை செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.