திருச்சி 9 இடங்களில் இன்று இலவச பொது மருத்துவ முகாம்

0
ntrichy

திருச்சி மாநகராட்சியில் 9 இடங்களில் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் இன்று நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதன்படி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் மூலத்தோப்பு பகுதி, கீழ கொண்டையம் பேட்டையில் உள்ள பாரதியார் பள்ளிக்கூடம், அரியமங்கலம் கோட்டத்தில் இருதயபுரம் பொன்னையா மேல்நிலைப்பள்ளி, காட்டூர் அண்ணா நகரில் உள்ள பள்ளிவாசல் தெரு, பொன்மலை கோட்டத்தில் கொட்டப்பட்டு செயின்ட்மேரீஸ் பள்ளி, 3வது வார்டில் ஸ்டார் நகரில் உள்ள சத்துணவுக் கூடம், 39வது வார்டில் ராமச்சந்திராநகரில் உள்ள சத்துணவுக் கூடம், 63வது வார்டு சக்தி நகரில் உள்ள சமூக நல மையம், கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் 52வது வார்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள சி.இ. நடுநிலைப்பள்ளி ஆகிய 9 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில் குழந்தைகள் நல பிரிவு, மகப்பேறு பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, கண் சிகிச்சை, சித்த மருத்துவம், இசிஜி பல் சிகிச்சை, ரத்த அழுத்தம் மற்றும் எடை பரிசோதனை என ஒவ்வொரு பிரிவிலும் துறை வல்லுநர்களை கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.