அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா-பேச்சு, கட்டுரை போட்டிகள்

0
நம்ம திருச்சி-1

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவினையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள்

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவினையொட்டி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளி இணைந்து நடத்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலுள்ள என்.எஸ்.கே. கலைவாணர் அரங்கில் பிப்.26 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் வரை நடைபெற்றது.

இப்போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் 30 பள்ளிகளிலிருந்து 110 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 5 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு “தியாக செம்மல் அன்னை மணியம்மை” மற்றும் “அன்னை மணியம்மையாரின் அரவணைப்பில் ஆதரவற்ற குழந்தைகள்” என்ற தலைப்பிலும், 8 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு “மனித நேய மாண்பாளர் அன்னை மணியம்மை”, “இளமையில், வளமையை விரும்பாத அன்னை மணியம்மை” ஆகிய தலைப்புகளில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.

பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000மும், கட்டுரை போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000மும், தனித்தனியாக வழங்கப்படுகிறது.

பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் பா.ஶ்ரீதர் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் இப்போட்டிகளை நடத்தினர். மேலும் இதே போல் அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றன.

Leave A Reply

Your email address will not be published.