ஆண், பெண் பாகுபாடு சமூக அவலமாகும் பெல் மனமகிழ் மன்ற மகளிர் தின விழாவில் தகவல்

0
ntrichy

 

திருவெறும்பூர் பெல் மனமகிழ் மன்றத்தில் பெல் மகளிர் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

பெல் செயலாண்மை இயக்குநர் ராஜாமனோகர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற மகளிருக்கு பரிசு வழங்கியதுடன், தனது உரையில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை வரதட்சணை ஆகியவற்றை தடுக்க மகளிர் தினத்தில் சபதம் ஏற்போம் என்றார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர் மணிமேகலை பேசும்போது, தற்போதைய பெண்கள் ஆண்களைவிட அதிகம் படிக்கின்றனர். ஆனால் அதில் 50 சதவீதம் பேர் கூட வேலைக்கு செல்வதில்லை. அதனால்த்தான் அவர்களது பொருளாதார முன்னேற்றம் கேள்விக்குறியாக உள்ளது. அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் கொள்கையால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. இதை ஏன் அரசு புரிந்து கொள்ள மறுக்கிறது என்றார். ஆண், பெண் பாகுபாடு சமூக அவலமாகும் என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.