மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்

0
ntrichy

மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் எழுந்தருளியிருக்கும் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் வருகின்ற ஏப்ரல் மாதம்-5 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.இத்திருவிழா நூற்றாண்டுகள் தாண்டி தொன்றுதொட்டு பாரம்பரியமாக நடந்து வருகிறது. தொட்டியம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும், வெளியூர்ளிலிருந்தும், தமிழ்நாட்டில் இன்ன பிற மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.இத்திருவிழாவில் மிகவும் பிரசித்தி பெற்றது தேரோட்டம் தான்.இக்கோவிலில் இரண்டு தேர்கள் உள்ளன. இரண்டும் மரத்தாலானவை,இதனை வருடா வருடம் தவறாமல் சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த இரண்டு தேர்களும் பக்தர்கள் தோலில் சுமந்து செல்பவை.பெரிய தேர் 32 அடி உயரமும், சின்ன தேர் 30 அடி உயரமாகும்.தேரோட்டத்தில் பக்தர்கள் எந்த ஒரு பாகுபாடின்றி சமமாக இருத்தேர்களையும் உற்சாகத்துடன் தோலில் சுமந்து கொண்டு தொட்டியம் பகுதி மக்களுக்கும்,திருவிழாவை காண வந்த பக்தர்கள் கூட்டத்திற்கும்,ஏற்ப பவனி வருகின்றனர். அதே சமயம் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டும் மிக சிறப்பாக நடக்கவிருக்கிறது, அதற்காக ஆயுத்தமாகும் தேர்கள், திருவிழா கடைகள்,இனிப்பு கடைகள் என அனைத்தும் தயாராகிகொண்டு இருக்கிறது. இந்த இரண்டு தேர்களில் முக்கியமான ஜந்து பாகங்களை வைத்து வருடா வருடம் செய்கிறார்கள். இந்த இரண்டு தேர்களையும் ஒரே பரம்பரையை சோர்ந்த மூன்றாவது தலைமுறையினர் இப்போது செய்து கொண்டிருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.