பொய் சொல்ல… இத படிங்க…

0
நம்ம திருச்சி-1

நம் உடலில் இருக்கும் அசைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயங்களை பிரதிபலிக்கின்றன. நாம் கூறும் வார்த்தைகளுக்குப்பின்னால், ஒளிந்திருக்கும் செய்தியை அறிவதிலும், ஒருவரது பார்வை அங்க அசைவுகள், பேசும் விதம், மௌனம் போன்றவற்றின் அர்த்தங்களை அறிய துடிக்கும் ஆர்வம் மனிதர்களிடையே சற்று அதிகம் என்பது இயல்பே. மனிதர்களிடையே பேசும் மொழியைப்போன்றே உடலின் அசைவும் மிகவும் முக்கியமான குணாதிசயங்களில் ஒன்று.

உடலின் அசைவுகள் அனைத்துமே ஒருவிதமான தகவல் தொடர்பு முறை தான். நாம் தெரிந்தோ தெரியாமலோ உடல் அசைவுகளை நடைமுறை வாழ்வில் பயன்படுத்திகொண்டே தான் இருக்கிறோம். நம் வாழ்வில் வெற்றி பெறவும், சாதிக்கவும் மேலும், வித்தியாசமாகவும் வாழவிரும்பும் நாம் ஒவ்வொரு உடல் அசைவைப்பற்றியும் நாம் புரிந்து கொள்வது அவசியம், உடல் அசைவு குறித்து தெரிந்து கொள்வது, எளிது என்றாலும் அதில் சில அடிப்படை நுணுக்கங்கள் உள்ளன. அது மிகவும் சுவாரசியமான விஷயமாகும். வாருங்கள் இனி அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்…

முகபாவனைகளின் மூலம்
பொய்சொல்வதை ஒன்றன் பின் ஒன்றாக கண்டுபிடிக்கலாம் வாங்க…
 சிறு குழந்தைகள் பொய் சொன்னால் தன்னுடைய கைகளாலே வாயை மூடிக்கொண்டே சிரிக்கும்.

 ஒருவர் பொய் சொன்னால் அவருடைய கைகள் அவரை அறியாமலே அவருடைய முகத்தைத்தொடும்.

 பொய்சொல்பவர்கள் பேசிவிட்டு தன்னுடைய கைகளால் வாயை மூடுவார்கள்

 கையில் அனைத்து விரல்களையும் மடித்து ஊதுவது போல் வாயின் மேல் மறைப்பது போன்று வைத்து பேசுவார்.

இப்படி அடிக்கடி பேசுபவருக்கு பொய் பேசும் பழக்கம் அதிகம். இதே உடல் அசைவுகளை பொய் பேசுபவரின் எதிரில் உள்ள நபர் செய்தால், அவருக்கு எதிராளி கூறுவது பொய் என்று தெரியும். அந்த பொய்யை அவரால் சகித்துகொள்ள முடியவில்லை என்றும் பொருள்.

 பெரும்பாலும் பொய் கூறுபவர்கள் தங்கள் முகத்தை தடவுவர், இதை எதிரில் இருந்து பார்ப்பவருக்கு முகத்தை தேய்ப்பது போன்று தோற்றமளிக்கும்.

 பொதுவாக பொய் சொல்லுபவரால் எதிரில் உள்ளவரது கண்களை நேருக்கு நேர் சந்திக்க இயலாது. இதனால் தான் பொய் சொல்லும் போது நம்மை அறியாமலேயே எதிரில் உள்ளவரை பார்க்கநேரும் போதெல்லாம் கைகளால் கண்களைத்தேய்ப்பது, கண்களில் இருந்து அழுக்கை எடுப்பது போன்ற பாவங்களை செய்வார்கள். இதே உடல் அசைவை கேட்பவர் செய்தால், சொல்லுவதை அவர் நம்பவில்லை என்று பொருள்.

 சிலர் பொய்சொல்லும் போது தன் கை விரல்களால் காதை வருடுவார். பலர் எதிரில் உள்ளவர்கள் கூறும் பொய்யை கேட்கும் போது உள்ளங் கைகளால் காதைத்தேய்ப்பது விரல்களால் காதுமடல்களை நீவி விடுதல் போன்ற பல்வேறு உடல் அசைவுகளை செய்வார்கள்.

இதற்கு எதிராளி கூறும் பொய் தன் செவிகளுக்குள் செல்வதை தவிர்க்க நினைக்கும் அவர்களது மனப்பாங்கே காரணம் ஆகும்.

 பொய்களைப் சொல்பவர் கழுத்தை தேய்த்தவரே பேசுவார். சிலர் தனது சட்டையை பின்கழுத்தில் இழுத்தவாறே தூக்கிவிட்டு பேசுவார். பொய் பேசும் பொழுது, இதய துடிப்பு அதிகரிக்கும், எங்கே நாம் கூறும் பொய்யை எதிரில் இருப்பவர் கண்டுபிடித்து விடுவாரோ என்ற படபடப்பு ஏற்படும். இதனால், பின் கழுத்து வியர்க்கும்.
பொய்பேசுபவர்களின்

பொதுவான உடல் அசைவுகள்

 கைகளை சட்டைப்பையில் மறைப்பது மற்றும் முதுகுப்புறத்தில் கைகளை கட்டிகொள்வது, உரத்த குரலில் பேசுவது, யோசித்து தட்டுதடுமாறி பேசுதல், அதிகமான கண்சிமிட்டுதல், கண்களை வலதுபுறமாக உயர்த்தி பார்த்தல், தோல்களை குலுக்குதல், உதட்டோரப் புன்னகை, பேனா போன்ற பொருட்களை கைகளில் வைத்து விளையாடிவாறே பேசுதல், உதட்டைக்கடித்தல், நாவால் உதட்டை வருடுதல், மிகவும் இறுக்கமான முகத்துடன் இருத்தல், உள்ளங்கையில் எப்போதும் மறைத்து வைத்து பேசுதல் உள்ளிட்டவை பொய் பேசுபவர்களின் பொதுவான உடல் அசைவுகளாகும். மேலும், இதுபோன்று அதிகமாக பொய் பேசுபவர்கள் கருப்பு கண்ணாடி அணிவதை அதிகமாக விரும்பி பயன்படுத்துவார்கள்.

Leave A Reply

Your email address will not be published.