சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்ப இன்று கடைசி தேதி

0
ntrichy

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி என்பது சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் விண்ணப்பங்கள், ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்தல், வங்கிக்கடனை முறையாக செலுத்த தேவையான அறிவுரைகளை வழங்குதல், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வங்கி மற்றும் நிதி சார்ந்த கல்வி அறிவு, காப்பீடு தொடர்பான விழிப்புணர்வினை ஊரகப்பகுதி மக்களிடையே ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வயது 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த வட்டாரங்களில் இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு 15.3.2018 அன்று எழுத்துத்தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.2000 மட்டும் மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் இணை இயக்குனர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்) மாவட்ட ஆட்சியரகம், அல்லது 0431-2412726 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.