கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி-பன்னாட்டுகருத்தரங்கு

0
நம்ம திருச்சி-1

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

பன்னாட்டுகருத்தரங்கு – நிகழ்த்துக்கலைகளில் மரபுக்குட்பட்ட புதுமைகள்

தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தின் நிதிஉதவி பெற்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியும் இணைந்து நடத்திய இரண்டு நாள் (07.03.2018 & 08.03.2019) பன்னாட்டுக் கருத்தரங்கின் நிறைவு நாளான 8ம் தேதி அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் இசைத்துறை தலைவர் முனைவர் R.மாதவி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலைப்பண்பாட்டுத் துறை ஆணையர் R.சீதாலெட்சுமி IAS கலந்து கொண்டு நிறைவு விழா பேருரையாற்றி பேராளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். அவரது சிறப்புரையில் காலத்திற்கேற்ற கருத்தரங்கின் தலைப்பு பாராட்டுக்குரியது.

நிகழ்த்துக்கலைகளில் மரபை சிதைக்காத மாற்றங்களே போற்றுதலுக்குரியது. மரபை தொலைத்த தலைமுறையாக இன்றைய தலைமுறை திசை மாறும் சூழலில் இது போன்ற ஆய்வரங்குகள் வளரும் தலைமுறைக்கு புதிய பாடமாக அமையும். நமது மரபை கற்றுத்தர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நம் மரபை சொல்லித்தருவதற்கான சூழல் குடும்பங்களில் குறைந்து வருகிறது. குழந்தை வளர்ப்பு முறை தொடங்கி கல்வி பயிலும் வயதுடையவர்கள் வரை நம்முடைய மரபு முழுமையாக தெரியாத தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்த சூழலில் மரபு சார்ந்த நம் கலைகளை முறையாக தலைமுறைக்கு கற்றுத்தந்தால் மட்டுமே நம் பண்பாட்டு மரபுகளை பாதுகாக்கமுடியும். மாற்றம் மரபுகளிலிருந்தே தொடங்க வேண்டும். மரபுகளில் கால் ஊன்றி மக்களுக்கான மாற்றங்களை கலையும் சிதையாமல் மரபு மீறாமல் காலத்திற்கேற்ற வடிவத்தை உருவாக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். பன்னாட்டுக் கருத்தரங்கின் ஆய்வு தொகுதியை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் S.முத்துக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கலைப்பண்பாட்டுத்துறை திருச்சி தஞ்சை இணை இயக்குநர் முனைவர் இரா.குணசேகரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இக்கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கல்லூரியின் வயலின் உதவிப்பேராசிரியர் முனைவர் D.ஆக்னஸ்ஷர்மீலி நன்றியுரையாற்றினார். இப்பன்னாட்டு கருத்தரங்கில் இலண்டன், பிரான்ஸ், இலங்கை, கர்நாடக, கேரளா ஆகிய இடங்களிலிருந்து பேராளர்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

 

Leave A Reply

Your email address will not be published.