திருச்சியில் தேசிய தர அங்கீகாரம் பெற்ற முதல் கண் மருத்துவமனை

0
நம்ம திருச்சி-1

ஜோசப் கண் மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜோசப் கண் மருத்துவமனை, 1934 ஆண்டு ஜோசப் அவர்களால் நிறுவப்பட்டு இன்று வரை சாதனை படைத்து வரும் மிகப்பெரிய கண் மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கிறது. இம் மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய நிறுவனம்(NABH), கண் மருத்துவ இறுதி நிலை அங்கீகார சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த மருத்துவமனையில் கண் பரிசோதனை, மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து முறையான குறைபாடுகளுக்கும், நோய்களுக்கும் சிறந்த முறையில் தீர்வும், சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் மூலமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கேற்ற சரியான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது.

கண் மருத்துவ சேவைகளின் முன்னோடியாக செயல்பட்டு வரும் ஜோசப் கண் மருத்துவமனை, தென் தமிழகத்தில் முதல் கண் மருத்துவமனையாக இந்த உயரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மிகுந்த அர்ப்பணிப்போடும். கூட்டு முயற்சியோடும், 300க்கும் மேற்பட்ட கடினமான தரத்தகுதிகளை நிவர்த்தி செய்து ஆய்வாளர்களால் பன்முறை ஆய்வு செய்தபின் இத்தரச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது இந்த நிறுவனத்தில், ரூ.2 கோடி செலவில், ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள் உலகத்தரத்திற்க ஏற்ப நவீனமயமாக்கப்பட்டது அல்லாமல் தீயணைப்பு கருவிகளும் பொருத்தப்பட்டு, பணியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு சர்வதேச நோயாளிகள் பாதுகாப்பு கொள்கைகளை ஜோசப் கண் மருத்துவமனை பின்பற்றி வருகிறது.

இங்கு வரும் நோயாளிகளுக்கு தரமான நெறிமுறைகளை பின்பற்றி, சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் நோயாளிகளுக்கு பாதுகாப்பானதும், சுகாதாரமுள்ளதுமான சுற்றுப்புற சூழல் அமையும்படி, ஜோசப் கண் மருத்துவமனையின் சகல செயல்பாடுகளும் சீராக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில், கடந்த 4 வருடங்களாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு எந்தவித கிருமி தாக்குதலும் ஏற்படாததால், கிருமி பாதிப்பு விகிதம் அறவே இல்லை. இதுவே (NABH)அங்கீகார நிறுவனம் எதிர்பார்க்கும் ஒரு தரமாகும்.

இங்கு ஒரே நேரத்தில் 100 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. அனைத்து கண் நோய்களை குணமாக்கும் வசதியோடு பிற மருத்துவமனைகளில் இருந்து உயர் கண்சிகிச்சைக்காக அனுப்பப்படும் நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

NABH ன் எதிர்பார்ப்பின்படி, பார்வை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் பலவற்றை (கண்தானம், பாதுகாப்பான தீபாவளி போன்ற) ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனுறும் வகையில் பொதுநலம் கருதி செய்துவருகிறது.

இந்த நிறுவனம் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆண்டுக்கு சுமார் 8 கண் மருத்துவர்களையும், 20 கண் பரிசோதனையாளர்களையும் உருவாக்கி வருகிறது.

இந்த உயரிய அங்கீகாரத்தை மக்களுக்கு அர்ப்பணிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

 

 

Leave A Reply

Your email address will not be published.