ஜல்லிகட்டை தேசிய விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும்

0
நம்ம திருச்சி-1

ஜல்லிகட்டை தேசிய விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும் ஜல்லிகட்டு பிரீமியர் லீக் தலைவர் வேண்டு கோள். ஜல்லிகட்டை தேசிய விளையாட்டாகவும். ஓலிம்பிக் விளையாட்டு போட்டிகளிலும் அங்கீகரிக்க வேண்டும் என்று ஜல்லிகட்டு பிரீமியர் லீக் தலைவர் டி.ஆர்.எஸ்.முத்துக்குமார் தெரிவித்துள்ளார். உலக வரலாற்றில் தமிழர் பண்பாடு ஓர் இன்றியமையாத சிறப்பான இடத்தை ஆக்கிரமித்துள்ளது

தமிழர் பண்பாட்டில் பல்வேறு அம்சங்களை பற்றி நிறைய ஆய்வுக் கட்டுரைகள் வெளி வந்துள்ளன. ஆனால் பண்பாட்டுக் கூறுகளுள். ஒன்றான ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டினைப் பற்றி வரலாற்று ஒப்பியல் நோக்கில் ஆராய முற்படவில்லை.

‘ஒலிம்பிக்’ விளையாட்டை துவக்கி வைத்ததன் மூலம் வீரவிளையாட்டு என்றாலே கிரேக்க நாகரிகமும், பண் பாடும், அவர்களின் வீர வரலாறும் நினைவுக்கு வருகின்றன. தாய் நாட்டை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வலிமையும் தியாக உள்ளமும் தேசப்பற்றும் உடைய இளைஞர்களை உருவாக்க சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் “ஒலிம்பியா” என்ற இடத்தில் நாடு முழுவதும் உள்ள வீர இளைஞர்களை ஓரே இடத்தில் திரட்டி வீர விளையாட்டுகளை கிரேக்கர்கள் நடத்தினர். அன்று கிரேக்கர்கள் நடத்திய வீர விளை யாட்டுக்கள் இன்று ஒலிம்பிக் பந்தயங்களாக உலக நாடுகள் கலந்து கொண்டு பெருமிதம் கொள்ளும் பெரிய விழாவாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

கிரேக்கர்களின் வீரத்திற்கு சற்றும் சளைக்காத தமிழர்கள், வீரத்தை விளைவிக்கின்ற வீர விளையாட்டுகளை தமிழ் நாட்டில் சங்க காலத்திலேயே, சிறப்பாக நடத்தப்பட்டன என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. இருப்பினும் வீர விளை யாட்டு ஏறு தழுவுதல் இன்றளவும் நிலைத்து தமிழர்களின் வீரத்தை உலகளவில் பறைசாற்றுகின்றன.

விளையாட்டு என்ற சொல் ‘விழை’ என்பதன் பொருள் “விருப்பம்” ஆகும். விரை திரிந்து விளை ஆயிற்று விருப்பமுடன் ஆடும் ஆட்டம் “விளையாட்டு” என வழங்கப்பட்டது. விளையாட்டு உணர்வு மனிதனுக்கு மட்டும் உரியதல்ல விலங்கினங்களும், பறவையினங்களும் விளையாட்டில் விருப்பமுடன் ஈடுபடுகின்றன. விளையாட்டில் மன மகிழ்ச்சியும் உடலுக்குப் புத்துணர்வும் கிடைப்ப தினால் எல்லா உயிர்களும் மகிழ்ச்சியுடன் இதில் ஈடுபடுகின்றன.

கி.மு.2000 ஆண்டுகளுக்கு முன்பே பழங்கால நாகரிகங்களை அமைத் துத்தந்தவர்களுள் எகிப்தியரும் மினோவான் மக்களும் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களுடைய நாகரிகத்தில் மனிதனுக்கும் காளைக்கும் நடக்கும் போர் காணப்படுகிறது. எகிப்தில் உள்ள பெனி – ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ்

என்னுமிடத்தில் உள்ள அரண் மனைச் சித்திரங்களிலும் காளைப் போர் இடம் பெற்றுள்ளது. இந்நாகரி கங்களில் இடம் பெற்றுள்ள காளைப் போர் சர்க்கஸ் வித்தைப்போல சித்தரிக்கப்படுகின்றது. அதாவது, காளையின் கொம்பைப் பிடித்துக் கொண்டு குட்டிக்கரணம் அடித்து காளையின் முதுகின்மேல் விழுந்து, பின்பு அருகிலிருக்கும் துணைவர்க ளின் கைகளுக்குத் தாவுவர். இவ்வகையான ஏறுபொருதல் வளர்ச்சி அடைந்த கலையாகவே காணப்படுகிறது.

இடைக்காலத்தில் எருது விளையாட்டு வழக்கில் இருந்ததை உறுதி செய்யம் வகையில் ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன் பாளையத்தில் கிடைத்த நடுகல் ஒன்று எருது விளையாடி மரணம் எய்திய ஒருவனைப்பற்றி எடுத்துரைக்கின்றது. அதாவது, கௌரி சங்கன் என்பவன் கரு வந்துறை என்னுமிடத்தில் நடந்த எருது விளையாட்டில் இறந்தான் என்றும், அவனுக்குச் சங்கனுடைய மகன் பெரியபயலு அவனுடைய வீரத்தின் நினைவாக நடுகல் நட்டான் என்றும் கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கின்றது, மேலும், வாசக மின்றி காளையின் உருவம் மட்டும் உள்ள அர்த்த சித்திரவடிவக் கல்வெட்டுகள் தருமபுரி மாவட்டத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன என்று தொல்பொருள் ஆய்வாளர் திரு.பெ.அர்த்த நாரீசுவரன் குறிப்பிடுகின்றார்.

வெளிநாடுகளில் காளைப்போர் ஸ்பெயின், மெக்ஸிகோ, போர்ஸிகோ, தெற்குப்பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இன்றும் நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தின் ஏறுதழுவலில் இருந்து வேறுபட்டது, இவ்விளையாட்டில் ஏழுதழுவுவோன் சிலரின் உதவியோடு காளையினை அடக்கிக் கொன்று விடுவான். காளையோடு மோதிக் கொல்வதற்கும் முறையான பயிற்சி தேவை. காளைச்சண்டை ஸ்பெயின் நாட்டில் ஒரு கலையாகவும், தேசிய விளையாட்டாகவும் ஏற்கப்பட்டுள்ளது.

இது ஏப்ரல் – நவம்பர் மாதங்களில் சிறப்பாக நிகழ்த்தப்படுகின்றது.

 

வெளிநாட்டு காளைப்போரும் – ஜல்லிக்கட்டும்

“ஸ்பெயின், போர்ச்சுகள், மெக்ஸிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது”

காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டி சண்டை யிட்டுக் கொல்வதே காளைப்போரின் நோக்க மாக உள்ளது. கலந்து கொள்பவரும் பயிற்சி பெற்ற வீரராக இருப்பர்,

“ஸ்பெயின், போர்ச்சுகள், மெக்ஸிகோ நாடுகளில் உள்ள வீரர்கள் கைதுல் கூர்மையான ஆயுதங்களை ஏந்கு காளைகளை அடக்குகிறார்கள். ஆனால் உயிரை துச்சமென நினைத்து காளையை அடக்குகிறான். உலகிலேயே தமிழன் ஒருவன் மட்டும் தான் தனது வீரத்தை நிலைநாட்டி வருகிறான். தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா என்பது பெருமைக்குரியதாகும்.

T.R.S. முத்துக்குமார்

ஜல்லிக்கட்டு பிரிமியர் லீக்

தலைவர்

 

 

Leave A Reply

Your email address will not be published.