உங்கள் சுண்டு விரல் எப்படி இருக்கு? ஜோசியம் சொல்லும் உண்மை !

0
நம்ம திருச்சி-1

ஒருவருடைய சுண்டு விரலின் அளவை வைத்து ஒருவரின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளலாம். இந்த முறை தென்கொரியாவில் பரவலாக காணப்படுகிறது.
மோதிர விரலின் முதல் கோடுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறிய சுண்டு விரலாக இருந்தால் இவர்களுக்கு கூச்ச சுபாவம் அதிகம் இருக்கும். அதிகம் வெட்கப் படுவார்கள். புதிய நபர்கள் மத்தியில் உயர்வாக இருக்கும் இவர்கள் பெரிய கனவுகளுடன் காணப்படுவார்கள்.

ஆனால் இவர்களின் கூச்ச சுபாவத்தால் தாங்கள் அடைய வேண்டியதை விட குறைவாகவே அடைவார்கள்.
மோதிர விரலுடன் ஒப்பிடுகையில் விரல்களின் அளவு இயல்பான
அளவில் இருந்தால் இவர்கள் ஒருவரை பற்றி நன்கு அறிந்த பின்புதான் நெருங்கி பழகுவார்கள்.

மோதிர விரலின் முதல் கோட்டுக்கு மேலே சுண்டு விரல் இருந்தால் இவர்கள் மிகுந்த சந்தோஷமான சுபாவம் உடையவர்கள் . அனைவருடனும் சிரித்து பேசுவார்கள். இருப்பினும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு வசப்படாது.
சுண்டு விரல் மட்டும் சற்று கீழ்நிலையில் இருந்தால் அவர்கள் கனவுலகில் வாழ்பவர்களாக இருப்பார்கள். தங்கள் கனவுலகை நிஜமாக்க அதிகமாக கஷ்டப்படுவார்கள்.
மோதிரவிரல் சுண்டு விரல் ஒரே அளவில் கொண்டிருப்பவர்கள் மிகவும் அரிதானவர்கள். இவர்கள் தனித்தன்மை கொண்டவர்கள். அதிக பலமும் ஆளுமை சக்தியும் கொண்டு இருப்பார்கள்.

சுண்டு விரல் மேடு சதுரமாக இருந்தது எனில் ரோல் மாடலாக இருப்பார்கள். எதையும் நேரிடையாக பேசுபவர்களாக இருப்பார்கள். ஒளிவு மறைவில்லாமல் பழகுவார்கள்.
சுண்டு விரல் மேடு முக்கோணமாக கொண்டிருப்பவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக இருப்பார்கள். மக்கள் மத்தியில் ஈர்ப்புடன் பேசுவார்கள்.
ஒரு கூட்டத்தில் தனி சிறப்பு குணத்தோடு காணப்படுவார்கள்.
சுண்டு விரல் மேடு சற்று வளைந்து காணப்படுபவர்கள் கொஞ்சம் பய உணர்வு மிக்கவர்களாக இருப்பார்கள். நமக்கெதுக்கு வம்பு என்று அமைதியாக காணப்படுவார்கள்.

Leave A Reply

Your email address will not be published.