கவர்னர் அய்யா…கவர்னர் அய்யா… உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா….

0
ntrichy

கவர்னர் அய்யா…கவர்னர் அய்யா…

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா….

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திருச்சியில் ஆய்வு செய்வதற்காக வருகை புரிந்ததால் ஊரே திணறிப்போயிருந்தது. புதிய சாலைகள் அமைப்பது, குப்பைகளை அகற்றுவது, சாலை ஓரச்சுவர்களில் வர்ணம் பூசுவது என திருச்சி மாநகராட்சியின் ஒரு வார செயல்களும் விரைவாகவே நடந்து முடிந்தது. ஆளுநர் வருகையால் திருச்சி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

காலை 7 மணிக்கு மலைக்கோட்டை உச்சிபிள்ளையாரை தரிசித்தபிறகு, 8 மணிக்கு ஶ்ரீரங்கம் அரங்கநாதசுவாமியை தரிசனம் செய்த ஆளுனர், காலை 10.30 மணிக்கு பாரதிதாசன் பல்கலைகழகதிதின் 34வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அவர் செல்லும் வழியில் புதுக்கோட்டை- திருச்சி சாலை, சுப்பிரமணியபுரம் பகுதியில் கே.என் நேரு தலைமையில் திரண்டிருந்த தி.மு.கவினர் கருப்புக்கொடி காட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சி சுற்றுலா மாளிகையில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகரக்காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். ஆய்வுக்கூட்டத்தின் பின் பொதுமக்களிடம் ஆளுநர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக மாலை 4 மணிக்கு  திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் “தூய்மை இந்தியா” திட்டக் கண்காட்சியை திறந்து வைத்தார். ஆளுனர் தூய்மைப் பணியில் ஈடுபடுவதற்காக மாநகராட்சி மிகுந்த சிரமப்பட்டு மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு துண்டு சீட்டு கூட கண்ணில் படாதவண்ணம் ஊரே சலவைக்காக விட்டதுபோல் தூய்மை பணிகள் செய்யப்பட்டிருந்தது. இருந்தும் கவர்னர், தூய்மை பணியில் ஈடுபட குப்பைகள் இல்லாத காரணத்தால் குப்பை தொட்டிகளில் இருந்த, ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட குப்பைகள் ஆளுநர் தூய்மைப்பணி செய்யவேண்டிய  இடத்தில் கொட்டப்பட்டு பரப்பிவைக்கப்பட்டது. இறுதியில் ஒரு வழியாக ஆளுநரும் அவருடன் சேர்ந்து அரசு அலுவலர்களும் கையுறைகளை அணிந்தவாரு இரண்டு நிமிட வீடியோ காட்சிக்கும் , புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, பின்பு திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள வீடு இல்லாத ஆதரவற்றவர்கள் தங்கும் இடத்தை ஆய்வு செய்து முடித்த பின் மாலை 6 மணிக்கும் இனிதே திருச்சிக்கு டாட்டா…சொல்லிவிட்டு விமானம் மூலம் சென்னைக்கு பறந்தார் தமிழக ஆளுநர்.

Leave A Reply

Your email address will not be published.