தோட்டம் அமைப்பதற்கு மானிய விலையில் அரசு இடுபொருட்கள் வழங்குகிறது

0
ntrichy

திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் வீட்டுக் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு மானிய விலையில் அரசு இடுபொருட்கள் வழங்குகிறது பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் ராஜாமணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து திருச்சி கலெக்டர் ராஜாமணி அறிக்கை: காய்கறிகள் நம் உணவில் இன்றியமையாத ஒன்றாகும். சரிவிகித உணவின் அடிப்படையில் பெரியவர்களுக்கு 85 கிராம் பழங்களையும், 300 கிராம் காய்கறிகளையும் நமது உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது காய்கறி பயிர்களில் மகசூலை அதிகரிக்க உரம், பூச்சி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு நமக்கு தேவையான காய்கறிகளை நாமே பயிரிட்டுக் கொள்ள வீட்டுத் தோட்டம் அமைத்து நஞ்சில்லா காய்கறிகளின் உற்பத்தியை பெருக்குவது அவசியமாகிறது. ஆனால் நகர்புறங்களில் வாழும் மக்களுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் வீட்டில் காலியாக உள்ள இடங்களில் பாலித்தீன் பைகள் அல்லது தொட்டிகளில் காய்கறி உற்பத்தி செய்வதற்கு தோட்டக்கலைத்துறை மூலம் தேவையான இடுபொருட்களுடன் கூடிய தளைகள் (கிட்ஸ்) மானியவிலையில் வழங்கப்படுகிறது.

ஒருதளையில் புற ஊதாக்கதிர் மெருகூட்டப்பட்ட 6 பாலித்தீன் பைகளுடன் கேக் வடிவிலான தென்னைநார் கழிவு 6 எண்களுடன் 10 வகையான காய்கறி விதைகள் (வெண்டை, அவரை, கொத்தமல்லி, அரைகீரை, முள்ளங்கி, கொத்தவரை, கத்தரி, மிளகாய், தக்காளி, பாகல்) இயற்கை பூச்சிகொல்லியும் வழங்கப்படுகிறது. இது தவிர அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்களும், நீரில் கரையும் உரம் 18:18:18ம் மேலும் திட்டவிளக்க குறிப்புரையும் வழங்கப்படுகிறது. ஒருதளையின் விலை ரூ.510 ஆகும். அரசு மானியம் ரூ.200 போக மீதம் ரூ.310 செலுத்த வேண்டும். ஒருநபர் அதிகபட்சமாக 5 தளைகள் பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டம் ஜூன் 23 முதல் ஜூலை 10ம் தேதி வரை கே.கே.நகர் உழவர் சந்தை (தொடர்புக்கு: 9751041004), அண்ணாநகர் உழவர் சந்தை (8438490455), துறையூர் உழவர் சந்தை (9487556428), நம்பர்.1 டோல்கேட்- சீனிவாச திருமண மண்டபம் அருகில் (9659428300) ஆகிய இடங்களில் விற்பனை முகாம் அமைத்து விநியோகம் செய்யப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.