பொன்மலை, அரியமங்கலம் கோட்டத்தில் அனுமதியற்ற மனைகளை முறைப்படுத்த சிறப்பு முகாம் 18, 19ம் தேதி

0
ntrichy

திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மாநகராட்சி பகுதிகளிலுள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்துதல் தொடர்பாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அனுமதியற்ற மனைப் பிரிவுகள் முறைப்படுத்துதல் மற்றும் இந்தத் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றுவது சம்பந்தமாக பொன்மலைக் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு தஞ்சாவூர் மெயின் ரோட்டில் சக்திநகர் பாரத் மாலில் வருகிற ஜூன் 19ம் தேதியும் (செவ்வாய்) மற்றும் அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு அரியமங்கலம் இளநிலைப் பொறியாளர் அலுவலகத்தில் வருகிற ஜூன் 18 மற்றும் 19ம் தேதிகளிலும் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.எனவே, மனை உரிமையாளர்கள், மனைப்பிரிவு வரைபடம், சுற்றுச்சார்பு வரை படம், பத்திரநகல், பட்டா சிட்டா நகல் மற்றும் வில்லங்கச் சான்று நகல் ஆகிய வற்றுடன் வந்து, விண்ணப்பம் செய்து தங்களின் மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தங்களிள் மனையினை வரன்முறைப்படுத்தும் வகையில், முகாம் நடைபெறும் இடத்திலேயே விண்ணப்பித்து, அதனை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில், அனுமதியற்ற மனையில் கட்டிடம் கட்ட, இனி வருங்காலங்களில் கட்டிட வரைபட அனுமதி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வரி விதிப்புகள் மற்றும் இதரச் சலுகைகள் எதுவும் வழங்க இயலாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.