சென்று வருகிறேன் சொந்தங்களே…!

0
நம்ம திருச்சி-1

சென்று வருகிறேன் சொந்தங்களே…!

இந்தியாவின் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்து, பேருந்து கூட இல்லாது தூரங்களை கால்களால் கடந்து,பள்ளிப்படிப்பை முடித்து,
தாய் நாட்டைக் காக்க சகோதரர்கள் ஆயிரம் பேருடன் தேர்வில் மோதி,கனவுகளோடு உடலை கட்டமைத்து இராணுவ வீரன் என நெஞ்சை தட்டி சொல்லும் நேரம் வந்தது.

சொந்தங்கள் மறந்து,இன்பங்கள் துறந்து நம் தாயின் பிள்ளைகள் தாராளமாய் வாழவே, தன்னலம் மண்ணோடு புதைத்து…!
நெஞ்சுரம் தொடுத்து,
பஞ்சுமெத்தை உறக்கங்கள் மறந்து சில நேரங்களில் உறக்கமே மறந்து. உருக்கும் வெப்பத்தில், இருக்கும் பணியிலும் என் தாய்ச் சொந்தங்கள் வாழ்வெண்னி போரிட்டேனே
துப்பாக்கி தோட்டக்களை விட என்னை துரத்த நினைக்கும் காலச் சுழலோடு
உயிர் தந்த தாயின் முகம் காண வருடங்கள் கடந்து வந்து சென்று போகும் நேரம் இதயகனத்தை என்னோடு புதைத்து தினம் என்னை கட்டிக்கொள்ளும் இந்தியத்தாயின் மடி தேடி தொடர்வண்டியில் பயணம் தொடங்கும்.

புகைப்படத்தில் கண்ணீர் சிந்தி புன்னகையும் சிந்தி பொழுதுகள் கழித்த நாட்கள் ஏராளம்.

இன்று என் உடல் மட்டுமே கரைந்தது மண்ணோடு.
உள்ளத்தின் எண்ணங்கள் என்னோடு புதையாது என் சகோதரர்களின் உதிரத்தில் விதையாய் விழுந்தது.
நாளை என் எண்ணங்களை என் கனவுகளை என் சகோதரன் என்னை விட உத்வேகத்துடன்
மார்தட்டி நிலைநிறுத்துவான் அன்று என் தாயை அழிக்க நினைக்கும் ஒவ்வொருத்தனின் தசையும் தரிசாகும்.

என்னை மறந்தாலும் நம் மண்ணை மாறவாதே என் சொந்தமே…..
சென்று வருகிறேன் கர்ஜனையோடு நான்……

-சண்முக நாதன்

Leave A Reply

Your email address will not be published.