தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி

0
ntrichy

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக தொடங்கவுள்ள உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு மானியத்துடன் ரூ.25 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் மானியத்துடன் வங்கிகள் மூலமாக கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கிராமப்புற பகுதியில் வசிப்பவர்களுக்கு மானியமாக 25 சதவீதமும், பழங்குடியின, சிறுபான்மையின, பிற்படுத்தப்பட்ட, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி மக்களுக்கு நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவீதமும், கிராமப்புறமாக இருப்பின் 35 சதவீதமும்வழங்கப்படுகிறது. பொதுப்பிரிவினர் தங்களது முதலீடாக 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.

18வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வங்கிகள் மூலம் முத்ரா மற்றும் ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பித்தால் மானியம் எளிதில் கிடைக்கும்.

தொழில் தொடங்க விரும்பமுள்ளவர்கள் தங்களது திட்டஅறிக்கை, உரிய ஆவணங்களுடன் www.kviconline.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தின் நகல்கள் 2, பாஸ்போர்ட் புகைப்படம்  இரண்டினை இணைத்து மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ தபாலிலோ அனுப்பலாம். மேலும் விபரமறிய 0431-2460823, 2460331 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.