கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம்

0
ntrichy


புதுக்கோட்டை:ஜீன் .11:புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் திலகர் திடலில் நடைபெற்றது…ஆர்ப்பாட்டத்திற்கு ரெங்கசாமி தலைமை தாங்கினார்..
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற துணைச் செயலாளர் மன்றம் சண்முகநாதன் பேசியதாவது: பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும்..இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கபடும் அநீதி களையப்பட வேண்டும்..ஆசிரியர்கள்,அமைச்சுப் பணியாளர்கள் ,கண்காணிப்பாளர்கள்,தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ,களப்பணியாளர்கள் ,பல்வேறு துறையிலுள்ள தொழில் நுட்ப ஊழியர்கள் மற்றும் ஊர்தி ஓட்டுநர்களின் ஊதிய முரண்பாடுகள் களைய வேண்டும்..கல்லூரி மற்றும் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கு 7 வது ஊதியக் குழு பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும்..சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு,அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள் ,ஊராட்சி செயலாளர்கள் ,நகர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்..21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையினை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உடனே வழங்கிட வேண்டும்..இளைஞர்களின் வேலைவாய்பினை பாதிக்க கூடிய வகையில் வெளியிட்ட பணியாளர்கள் பகுப்பாய்வு குழுவினை ரத்து செய்திட வேண்டும்..பள்ளிக்கல்வித் துறை மூலம் ஒழிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களை காத்திடவும் அரசு பள்ளிகளை மூடுவதை தடுத்திடவும் இந்த போராட்டம் நடைபெறுகிறது..எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சென்னையில் ஜீன் 11 முதல் மாநில ஒருங்கிணைப்பாளர்களும்,உயர்மட்டக் குழு நிர்வாகிகளும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்…அதே சமயம் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாலைநேர ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்றார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜாங்கம்,செல்வராஜ்,கணேசன்,ஜீவன்ராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்..
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்….

Leave A Reply

Your email address will not be published.