திருச்சி 9,780 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் திருச்சி வந்தது

0
ntrichy

9,780 புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று திருவெறும்பூர் வந்தது. திருச்சி மாவட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புதிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் வந்திறங்கியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான எண்ணிக்கையில் உள்ளதா என கலெக்டர் ராஜாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் கலெக்டர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் மூலம் திருச்சி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட் பெங்களூர் நிறுவனத்திடமிருந்து திருச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் பணிக்கு புதிய வாக்குபதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டுக் கருவிகள் என மொத்தம் 9,780 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றுள்ளது. இதில் மின்னணு வாக்குபதிவு கருவிகள் 6340ம், கட்டுப்பாட்டு கருவிகள் 3,440ம், என மொத்தம் 9,780 இயந்திரங்கள் உள்ளன. இவற்றில் ரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் 3,440, ரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3,170 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத் தில் 3170 மின்னணு வாக்குபதிவு இயந்திரம் என மொத்தம் 9780 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரமும் இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி வருவாய்த்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் 24 மணிநேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். முழுபாதுகாப்பாக வைக்கப்படும் என்றார்.
சார் ஆட்சியர் கமல்கிஷோர், தேர்தல் வட்டாட்சியர் தமிழ்கனி, திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபா மற்றும் பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.