ஜாதி, மதம், பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம்

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள்

0
ntrichy

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜாதி, மதம் மற்றும் பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டுபோட வேண்டாம் என தமிழ்மக்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, சத்குரு அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

எல்லோருக்கும்வணக்கம், நம் தமிழ்மாநிலத்தில் இருக்கும் எல்லாதமிழ் அன்பர்களுக்கும் நான் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். நாம் ஜனநாயகத்தில் இருக்கிறோம். ஜனநாயகம் என்றால் ஜனங்கள் தான் நாயகர்கள். இந்த தேர்தல் நேரத்தில் நாம் நம் பொறுப்பை நல்லப்படியாக கடைப்பிடிக்க வேண்டும். நம்நாட்டு தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம்கையில் இருக்கிறது. இதை நாம் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

நான் தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். இருந்தாலும், தேர்தல் நாளான 18-ம் தேதி ஒரே ஒரு நாள் மட்டும் நான் வாக்களிப்பதற்காக இந்தியா வருகிறேன். வாக்களித்து விட்டு மீண்டும் உடனே இங்கு திரும்ப வேண்டி உள்ளது. நான் இந்த அளவுக்கு பொறுப்பு எடுப்பதற்கு காரணம், இது மிகமிக முக்கியமான பொறுப்பு. நம்நாட்டின் முன்னேற்றம்,  நாட்டின் எதிர்காலம், அடுத்ததலைமுறையினரின் எதிர்காலம் நம்கையில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓட்டு என்பது ஒரு சாமானியமான விஷயம் அல்ல. ஜனநாயகம் வருவதற்கு முன் நாட்டின் தலைவரை நிர்ணயிக்கும் சக்திகிடையாது. இப்போது தான் இந்த சக்தி நம்கையில் இருக்கிறது. இதை நீங்கள் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் மக்கள் எல்லாரும், ஒருவர்விடாமல், உங்களுக்கு யார் வேண்டுமோ, யார் வந்தால் நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறீர்களோ அவருக்கு ஓட்டு போடுங்கள். பிறர் சொல்வதைவைத்தும், ஜாதி, மதம், பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம். நாட்டுக்கு எது நல்லதோ அதை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சத்குரு வீடியோவில் பேசியுள்ளார்.

சத்குரு அவர்கள் கடந்த மார்ச் இறுதியில் இருந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அங்குள்ள மக்களுக்குயோகா கற்றுக்கொடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் உள்ளார். தேர்தல் நாளான 18-ம் தேதி மட்டும் வாக்களிப்பதற்காக அவர் கோவை வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும், ஜனநாயகம் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சத்குரு அவர்கள் தொடர்ந்து பேசிவருவதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.