திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில ஆலோசனை கூட்டம்

0
ntrichy

திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில ஆலோசனை கூட்டம் ki
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

*நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
*

1. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு இது வரை அனுதாபமோ, வருத்தமோ தெரிவிக்காத பிரதமர் மோடிக்கு கண்டனம்.

2. தவறான அணுகுமுறைகளால் இந்தியாவின் பன்முக தன்மையும், மதச் சார்பின்மையும் கேள்வி உள்ளாக்கிய மத்திய அரசுக்கு கண்டனம்.

3. சேலம் பசுமை வழிச் சாலையை எதிர்த்து போராடும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை கைது செய்த அதிமுக அரசுக்கு கண்டனம்.

4. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அமைப்பு மற்றும் அதிகார வரம்பு ஆகியவற்றை பாராளுமன்றத்தில் வைத்து விவாதித்த பின்னரே நடைமுறைபடுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு கண்டனம்.
இதில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேசியதாவது”

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கான்ட்ராக்டில் கமிஷன், ரோடு போடுவதில் கரப்சன் என ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்களுக்கு 10 கோடி வரை செல்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எடப்பாடி உட்பட அனைவரும் சிறைக்குள் தான் இருக்க வேண்டும்.
இந்த ஆட்சியை மாமுல் கொடுத்து தக்க வைத்துள்ளனர்.

ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகவை ஆளும் கட்சியாக மக்கள் பார்க்கிறார்கள்.

கலைஞர் ஆட்சி தான் 2 முறை கவிழ்ந்துள்ளது, ஆனால் கலைஞர் யார் ஆட்சியையும் கவிழ்த்ததில்லை. திமுக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள கட்சி என
திருச்சியில் நடைபெற்ற திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு.

Leave A Reply

Your email address will not be published.