திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி

0
ntrichy

தமிழகத்தில் ரஜினியால் எதுவும் செய்ய முடியாது. வரும் தேர்தலில் திமுக வீறுகொண்டு எழும் என்று திருச்சி உறையூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பழ.கருப்பையா பேசினார்.திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் நேற்று நடந்தது. உறையூர் பகுதி செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். வட்ட செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்றார். தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா பேசியதாவது:மோடி ஆட்சியில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. 4 ஆண்டாக நாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாநிலத்தின் உரிமையை விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் கவர்னர் ஆய்வு செய்வதை கண்டித்து திமுக போராட்டம் நடத்துகிறது. சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை 10 ஆயிரம் கோடியில் அவசரமாக அமைக்க என்ன அவசியம் இருக்கிறது. தமிழகத்தில் தெளிவான முடிவெடுக்கும் அமைச்சர்கள் யாருமில்லை.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாகவும், எம்ஜிஆர் ஆட்சி தரப்போவதாக ரஜினி சொல்கிறார். அவரால் எதுவும் செய்ய முடியாது. தமிழகத்தில் வெற்றிடம் என்பது இல்லை. திமுகவுக்கு உள்ள 50 சதவீதம் அப்படியே உள்ளது. கடந்த முறை தேர்தலில் 1 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி வாய்ப்பை தவற விட்டது. அடுத்த தேர்தலில் திமுக வீறுகொண்டு எழும். எளிதில் திமுக வெல்லும் என்றார்.நகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.