உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதிஉதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

0
ntrichy

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வாகன சோதனையின்போது இன்ஸ்பெக்டர் தாக்கியதால் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதிஉதவி வழங்கவும், இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது இரட்டைக்கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், நியாயம் கேட்டு போராடியதால் கைது செய்யப்பட்ட 23 பேரை  விடுவிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவெறும்பூர் கடைவீதியில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஶ்ரீதர் கூறியதாவது, போலீசாருக்கு ஹெல்மெட் வழக்கு இவ்வளவு போடவேண்டும் என இலக்கு நிர்ணயிப்பது கண்டிக்க தக்கது என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் நட்ராஜன், பாண்டியன், ராஜா, பழனிசாமி, சங்கிலிமுத்து, மணிமாறன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.