Modern technology gives us many things.

கலெக்டர் அறிவுரை: மென்பொருள் மூலம் மட்டுமே சம்பள பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும்

RTI

மென்பொருள் மூலம் மட்டுமே சம்பள பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும்

BG Naidu

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கருவூலத்துறை மூலம் ஒருங்கிணைந்து நீதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Sathya

கூட்டத்திற்கு கலெக்டர் எஸ் சிவராசு தலைமைதாங்கி பேசுகையில், ‘ஐ.எம்.எஸ். ஆர்.எம். எஸ் மென்பொருள் மூலம் ஜூலை 2020 மாத புதிய பட்டியலை தயார் செய்து வருகிற 16-ஆம் தேதிக்குள் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Ukr new

வருகிற 1-ந்தேதி முதல் பழைய முறை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மென்பொருள் மூலமாக மட்டுமே அனைத்து துறையிலும் சம்பள பட்டியல் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தினால் திருச்சி மாவட்டத்தில் 39 ஆயிரம் அரசு ஊழியர்கள், 34 ஆயிரம் ஓய்வூதியர்கள் பயன்பறுவார்கள்’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட கருவூல அதிகாரி மற்றும் அனைத்து துறை கணக்கு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!