நேய மாண்பாளர் மணியம்மையார் நூற்றாண்டு விழா

0
நம்ம திருச்சி-1

திருச்சி, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சி அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் மார்ச்.9 ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை தந்தை அனைவரையும் பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் விஜயலட்சுமி வரவேற்று உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அன்னை மணியம்மையார் வேடமிட்ட 100 மாணவிகள் முற்போக்கு சிந்தனை நாகடம், அன்னை மணியம்மையார் செளிணித தியாகங்கள், நடத்திய போராட்டங்கள், பெரியாருக்கு செளிணித சேவைகள், பெண்கள் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பணிகள், கூட்டங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை விழிப்புணர்வு நாடகம், சிந்தனை தூண்டும் பேச்சு மூலம் மாணவ செல்வங்கள் அன்னை மணியம்மையாரின் தொண்டுகளை கண்முன்னே நடித்துக் காட்டினர். இவ்விழாவினையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செண்பகவள்ளி நன்றி கூறினார்.

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற  அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவினையொட்டி ‘ஆதரவற்ற குழந்தைகளின் தாளிணி அன்னை மணியம்மையார்’ என்ற தலைப்பில் மாணவர்கள் நடத்திய நாடகமும், இளமையில் வளமையை விரும்பாத மணியம்மையார், நேய மாண்பாளர் மணியம்மையார், ஆதரவற்ற குழந்தைகளின் அன்னை மணியம்மையார் ஆகிய தலைப்புகளில் மணியம்மையாரின் எளிமையும், அருந்தொண்டுகள் பற்றியும் மாணவ, மாணவிகள் எழுச்சியுரையாற்றினர். மேலும் நூற்றாண்டுக்கே பெருமை சேர்த்த மணியம்மையார் என்ற தலைப்பில் கவிதை வாசிப்பு மற்றும் தியாக செம்மல் மணியம்மையார் பற்றி பாடல் பாடியும் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முதல்வர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.