திருச்சி பேராசிரியர் மீது சி.பி.ஐ. வழக்கு !

0
ntrichy

திருச்சி பேராசிரியர் மீது சி.பி.ஐ. வழக்கு !

கல்வியல் கல்லூரிகளுக்கு(பி.எட்) அனுமதி வழங்குவது தொடர்பான முறைகேட்டில் சிக்கிய பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியல் துறைத்தலைவர் மீது சீ.பி.ஐ. வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி வாரியம் மூலம், இந்தியாவின் கல்வியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படுதல் மற்றும் ஏற்கனவே உள்ள கல்லூரிகளை புதுப்பிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இப்பணிக்காக வாரியத்தின் மூலம் 2பேர் கொண்ட குழு வருடவரும் நியமிக்கப்படும். அவர்கள் பல்கலைக்கழக அளவில் உள்ள துறைத்தலைவர்கள் அல்லது பேராசிரியர்களா இருப்பார்கள்.
ஆய்வாளர்களின் தேர்வு முறை

தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தில் கல்வியியல் கல்லூரிகளை ஆய்வுமேற்கொள்வதற்கான தகுந்த பேராசிரியரை பரிந்துரைக்கும் படி பல்கலைக்கழகத்திற்கு சுற்றறிகை அனுப்பப்படும். மீண்டும் பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த ஆய்வுக்கு தகுந்த நபர் இவ்வாரியத்திற்கு பரிந்துரைக்கப்படுவர். அதன்படி, நியமிக்கப்படும், ஆய்வாளர்கள் கல்வியல் கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதி, தேவையான பாடத்திட்டங்கள் போன்றவை முறையாக உள்ளதா என ஆய்வு செய்து வாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

முறைகேடு

அந்த வகையில் கடந்த 2016ல் கல்வியியல் கல்லூரிகளை ஆய்வுமேற்கொள்வதற்கு திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறைத்தலைவர் கே.ஆனந்தன் மற்றும் வடஇந்தியாவைச்சேர்ந்த மற்றொருவரையும் ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களும் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தில் உள்ள கல்லூரி அமைப்பதற்கு உண்டா விதிமுறைகளை சரியாக பின்பற்றாத பல்வேறு கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து, நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர். இதற்காக, இவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சி.பி.ஐ. வழக்கு

பின்னர், இவர்கள் மீது சி.பி.ஜ விசாரணை அமைக்கப்பட்டு இவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என நிருபிக்கப்பட்டது. மேலும, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியல் துறை தலைவர் கே.ஆனந்தன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி வாரியம் பரிந்துரை செய்தது. அதன்அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்வியல் துறை தலைவர் ஆனந்த் மீது பல்கலைக்கழகம் சார்பில் விசாரணை கமிட்டி அமைத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடமாநிலத்தில் இருந்து நியமிக்கப்பட்ட ஆய்வாளர் பல்கலைக்கழகத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.