ஜூன் 30க்குள் ஆதார் – பான் எண் இணைக்காவிட்டால், வருமானவரி தாக்கல் செய்ய முடியாது?: மத்திய அரசு

0
ntrichy

ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட அவகாசமான ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆதார் – பான் எண்களை இணைக்காவிட்டால், வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. வருமானவரிச் சட்டப்பிரிவு 139 AA உட்பிரிவு இரண்டின் படி, ஜூலை 1, 2017 அன்று பான் வைத்திருப்பவர்கள், ஆதார் எண்களை வரித்துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவது கட்டாயமாகும்.

வருமானவரிக் கணக்குத் தாக்கலுக்காக பான் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கூறிய மத்திய அரசு அதற்கான அவகாசத்தை ஏற்கெனவே 4 முறை நீட்டித்தது. ஜூன் 30-ஆம் தேதி அன்று அவகாசம் முடியும் நிலையில், அதற்குள் ஆதார் – பான் எண்களை இணைக்காவிட்டால், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

Leave A Reply

Your email address will not be published.