உலக வன உயிரின நாளையொட்டி ஜமால் முகமது கல்லூரியில் கோவை ஓசை அகிலா உரை

0
ntrichy

உலக வன உயிரின நாளையொட்டி ஜமால் முகமது கல்லூரியில் கோவை ஓசை அகிலா உரை

திருச்சி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற சார்பில் அண்மையில் ஜமால் முகமது கல்லூரியில்  ‘காக்கைக் குருவி எங்கள் ஜாதி’    என்ற தலைப்பில்  சூழலியல் கோவை ஓசை அகிலா பேசினார்.

“பூமிப் பந்தில் 5% தான் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. ஆனால் 30% உயிரினங்கள், 1700 வகையானத் தாவரங்கள், (இதில் 576 அரியவகை தாவரங்கள்) மேற்குத்தொடர்ச்சி மலையில்தான் உள்ளன. உலகிலுள்ள உயிரினங்களில் மனித இனம் மட்டுமே குப்பை போடுகிற இனமாக உள்ளது. எந்த உயிரினங்களும் தன்னுடைய  உயிரினங்களுக்கு பிரச்சினைகளை உருவாக்காது. அழிக்காது. கொல்லாது. மனிதன் மட்டுமே தன் இனத்தை தானே அழிக்கும் உலகமக்களை அழிக்கும் இனமாக உள்ளான். கடலில் காற்றாலைகள் அமைப்பதால் வலசை வரும் பறவைகள் செத்து மடிகின்றன.

காட்டை பாதுகாக்கும் நிலவாழ் பெரிய பாலூட்டியான யானை ஒரு நாளைக்கு 365 முறை 96 வகையான மர வகைகளை விதைக்கிறது. தண்ணீர் அமைப்பு தலைவர் சேகரன்,  செயலாளர் நீலமேகம், இணை செயலாளர்கள் சதீஷ்குமார், தாமஸ், ராஜா, எடிசன், ராஜேஷ், குண்டூர் லலிதா பிரபு,  மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் சிராஜூதீன் கீர்த்தனா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.