Modern technology gives us many things.

திருச்சி மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்கிறார்களா?

கண்காணிப்பில் 44 குழுக்கள்- திருச்சி மாவட்ட ஆட்சியர்

RTI

திருச்சி மாவட்டத்தில் கரோனா நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து  அதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

BG Naidu

பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பொது இடங்களில் மற்றும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களை அனுமதிக்க கூடாது.

திருமணம் மற்றும் சுப காரியங்களில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதியில்லை. பொது இடங்களில் மது அருந்துவது, புகை பிடிப்பது, எச்சில் துப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

Ukr new
Sathya

டீக்கடை, உணவகங்கள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். இதர கடைகள் காலை 10 மணி முதல் 8 மணி வரை செயல்படலாம்.

இதனை மக்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க வருவாய்த்துறை, காவல்த்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறை அலுவலர்கள் இணைந்து மாவட்டம் முழுதும் காவல் நிலையம் வாரியாக 44 குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் கண்காணிக்கப்பட உள்ளனர்.

அந்த  வகையில் ஒவ்வொரு குழுவிலும் துணை தாசில்தார், துணை ஆய்வாளர்,  காவலர்,  மாநகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் சுகாதார ஆய்வாளர், உள்ளாட்சித்துறை அலுவலர் என ஒரு குழுவில் இடம் பெறுவர். இவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகள், பொதுஇடங்களில் அரசு வழிகாட்டுதலின்படி விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணித்து, விதிமீறல்களை பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படி நடவடிக்கை எடுப்பர்.

இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!