அன்னவாசல் ஒன்றியத்தில் திறனாய்வு தேர்வு.

0
ntrichy


அன்னவாசல்,ஜீன்.12:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஆதி திராவிட மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு அன்னவாசல் வட்டார வள மையத்தில் வைத்து நடைபெற்றது..தேர்வினை தொடங்கி வைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோவிந்தராசு பேசியதாவது:2018-2019ஆம் ஆண்டில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு மேல் வகுப்பு கல்வி வழங்குதல் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கவே திறனாய்வு தேர்வு நடைபெறுகிறது..இத்தேர்வினை அன்னவாசல் ஒன்றியத்தைச் சேர்ந்த 142 பள்ளிகளில் பள்ளிக்கு ஒருவர் வீதம் மொத்தம் 142 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் எழுதுகிறார்..இத்தேர்வினை எழுத சென்ற ஆண்டு 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் 5 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்…வட்டார அளவில் நடைபெறும் இந்த தேர்வில் தலைசிறந்த மூன்று மாணவர்கள் வட்டார அளவில் தேர்வு செய்யப்படுவர்.. பின்னர் அவர்களை உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் மேல் வகுப்பு கல்வியும் இலவசமாக வழங்கப்படும் என்றார்..திறனாய்வு தேர்விற்கு மாணவர்களை அன்னவாசல் ஒன்றியத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தயார் செய்து அழைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave A Reply

Your email address will not be published.