Modern technology gives us many things.

மாம்பழச்சாலை ஆஞ்சநேயர் கோயில் அகற்ற காவல்துறை நடவடிக்கை

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்வதாக எச்சரிக்கை

RTI

திருச்சி மாம்பழச்சாலையில் 90 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. திருச்சி காவிரி பாலம் முதல் திருவானைக்காவல் வரை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் இக்கோயிலை நேற்று அகற்றும் பணியில்  நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.

BG Naidu
Sathya

அப்போது அங்கு வந்த இந்து முன்னணியினர் இக்கோயிலை தினமும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இதனை அகற்றுவது பக்தர்களுக்கு மனவேதனை அளிக்கிறது. இதுகுறித்து ஒரு மாதத்திற்கு முன்பே புகார் அளித்துள்ளோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் இக்கோயிலை அகற்ற முயற்சித்தால் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் செய்வோம் என்றனர்.

தொடர்ந்து ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!