நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பணிகளை விரைவில் முடிக்க கூடுதல் தலைமை செயலர் உத்தரவு

0
ntrichy

நிலம் எடுப்பு-கையகப்படுத்துதல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்திருச்சி வருவாய்த்துறை சார்பில் நிலம் எடுப்பு, நில மாற்றம், நிலம் கையகப்படுத்துதல், குத்தகை நிலங்கள் மற்றும் பட்டா மாற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

கூடுதல் தலைமை செயலரும், நில நிர்வாக ஆணையருமான ஜெயக்கொடி தலைமை ஏற்று, திருச்சி விமான நிலைய விரிவாக்கம், சிப்காட், டிஎன்பிஎல், ஆர்.ஓ.பி, ஆர்.வி.என்.எல் ஆகியவற்றுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நில மாற்றம், நிலக்குத்தகை, இலவச வீட்டுமனைப்பட்டா, இணையவழி பட்டா மாற்றம், நில ஆவணங்களை கணினி வழி பதிவேற்றம் செய்தல், தணிக்கை தடை பகுதிகள் ஆகியவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும் கிராம உதவியாளர்களுக்கு விஏஓ பதவிஉயர்வு ஆணை, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் தாலுக்காவில் தலா 2, முசிறி தாலுகாவில் 3 , தொட்டியம், மருங்காபுரி தாலுக்காவில் 1 என மொத்தம் 11 கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் மைய நில உடமை ஆவணங்கள், பெயர் மாற்றம், பதிவு உள்ளிட்ட இனங்களில் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களும் எவ்வாறு செயல்படுகிறது என்றும், நேரடியாக ஆன்லைன் மூலம் வழங்கப்படுவதையும், அதன் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தார். கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி, டிஆர்ஓ பஷீர், உதவி ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.