டிக்டாக்-ல் வளம் வந்த இளம் வயதினருக்கு ஓர் பேரதிர்ச்சி! -ஆப்படித்த ”ஆப்”

0
ntrichy

டிக்டாக்-ல் வளம் வந்த இளம் வயதினருக்கு ஓர் பேரதிர்ச்சி! -ஆப்படித்த ”ஆப்”

டிக்-டாக் செயலி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக இளம் வயதினர் ஆண்,பெண் என பலரும் இந்த செயலியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியால் பல்வேறு பிரச்சனைகளையும் சந்திக்கும் இளம் வயதினர், பலர் இந்த டிக்டாக் விபரீதத்தால் உயிரையும் விட்டிருக்கின்றனர். பலர் பிரபலமாகியும் உள்ளனர்.

மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,

சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இதனையடுத்து அந்த செயலிக்கு தடை விதித்து மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் பலகோடி பேர் பயன்படுத்தி வந்த டிக்டாக் செயலியை கூகுல் ப்ளே ஸ்டோரிலிருந்து இந்தியாவில் கூகுல் நிறுவனம் நீக்கியுள்ளது.

இந்த செய்தியால் ராஜாவாகவும்,ராணியாகவும் தன்னை நினைத்துக்கொண்டு  டிக்டாக்-ல் வளம் வந்த இளம் வயதினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.