82 வது பிறந்தநாள் கொண்டாட்டம் முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ்

0
ntrichy

 

திருச்சியின் அடையாளம் முன்னாள் எம்.பி அடைக்கலராஜ் சிலைக்கு 82வது பிறந்த நாள்  கொண்டாட்டம்.

காங்கிரஸ்  மூத்த தலைவர்களில் ஒருவரும் திருச்சி முன்னாள் எம்.பியுமான.  மறைந்த அடைக்கலராஜின் 82வது பிறந்தநாள் விழா கொண் டாடப்பட்டது. இதையொட்டி  காங்கிரசார் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்தனர். திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள அடைக்கலராஜின் சிலைக்கு காலை அடைக்கலராஜின் மகன்கள் தொழிலதிபர்கள் ஏ.ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் தலைமையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவஹர், வடக்கு மாவட்ட தலைவர் கலை, தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சேட், ராஜா நசீர், ரெக்ஸ், ராஜகோபால், அல்லூர் சுரேஷ், அருண், ராஜேஷ், பிரேம், இன்ஜினியர்கள், காளிமுத்து, காளீஸ்வரன், மற்றும் சத்தியநாதன், கள்ளிக்குடி சுந்தரம், காளிமுத்து, சிவாஜி சண்முகம், உய்ய கொண்டான் திருமலை பாஸ்கர், காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் ஜி.கே. முரளி, ஆபிரகாம், தென்னூர் குத்தூஸ், ஜெகதீஸ்வரி, கள்ளத்தெரு குமார், ஜோசப் ராஜா, டேனியல் ராஜ், ஜாகீர் உசேன், அருண், சுந்தர்ராஜ், வீரமுத்து, கோபால், வில்ஸ் முத்துக்குமார், வக்கீல் சந்திரன், ஜெயராமன், பூக்கடை பன்னீர்செல்வம், ஓவியர் கஸ்பர், உறந்தை செல்வம், கருப்பையா, மன்சூர், முத்து, ஆனந்தராஜ் உள்பட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்

 

Leave A Reply

Your email address will not be published.