திருச்சி அரசு மருத்துவமனையில் அடைத் தேணியை அப்புறப்படுத்த கோரிக்கை

0
ntrichy

அரசு மருத்துவமனையில் அடைத் தேணியை அப்புறப்படுத்த கோரிக்கை

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை திருச்சி புத்தூரில் செயல்பட்டு வருகின்றது விபத்து மற்றும் உயர் சிறப்பு மற்றும் சிகிச்சை கட்டிட வளாகத்தில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் காப்பாளர்கள் வந்து செல்கின்றார்கள் அதில் ஐந்தாவது தல ஜன்னல் தாழ்வாரத்தின் கீழ் மிகப்பெரிய தேனடை தேனீக்களால் கட்டப்பட்டுள்ளது இத்தேன் அடையானது MM 1 ஆண்கள் சிகிச்சைப்பிரிவு ஐந்தாவது தள ஜன்னலோரத்தில் கட்டப்பட்டுள்ளது ஜன்னலில் இருக்கும் பல்வேறு நெட்லான் பழுதடைந்து உள்ளதால் சிகிச்சை பெறும் இடத்திற்கு தேனீக்கள் செல்லும் அபாயம் உள்ளது இதனால் நோயாளிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கட்டிட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தேன் அடைகளை அப்புறப்படுத்தி நோயாளிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறு வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.