திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உணவகத்துக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்

76 லட்சம் வாடகை பாக்கி

0
நம்ம திருச்சி-1

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் கண்ணன் உணவகம் ரூ.76 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்ததாம். அதனால், மாநகராட்சி ஊழியர்கள் கடந்த 9-ம் தேதி அந்த உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர்.

 

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான கட்டங்களில் வாடகை பாக்கி வைத்திருக்கும் கடை மற்றும் நிறுவனங்களிடம் தற்போது மாநகராட்சி ஊழியர்கள் தீவிர பாக்கி வசூல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த 2004ம் ஏப்ரல் 1ம் தேதி முதல் வாடகை செலுத்தாத உணவகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் வாடகை செலுத்த வேண்டி இருமுறை நோட்டீஸ் அனுப்பியும், ஆனால், உணவக நிர்வாகமோ அதற்கு எந்த பதிலும் கூறாததால், ரூ.76 லட்சத்து 28ஆயிரத்து 871 வாடகையை வசூல் செய்ய வேண்டி, கடந்த மார்ச் 9ம் தேதி மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில், பொன்மலை கோட்ட உதவி கமிஷனர் தயாநிதி தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் அந்த உணவகத்துக்கு சீல் வைத்தனர்.

ஷேக் முகமது என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த உணவகம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ஷேக் முகமது காலமாகியதும், ஆனால், உணவகம் அவரது பெயரிலேயே அனுமதியின்றி ஒருவர் நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

இந்த உணவகம், திருச்சியில் மட்டுமின்றி கோயமுத்தூர், திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் முக்கிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதனுடன் இயங்கி வந்த டீக்கடை, இனிப்பகம் உள்ளிட்டைவைகளும் சீல் வைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Leave A Reply

Your email address will not be published.