அதிமுக கூட்டணியில் திருச்சியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்

0
நம்ம திருச்சி-1

திருச்சி நாடாளுமன்ற தொகுதி எப்போதும் விஐபி தொகுதி என்கிற அந்தஸ்தைப் பெற்று விடும். அந்த அளவிற்கு அனைத்து கட்சிகளின் தலைமையும் எப்போதும் திருச்சியைக் குறி வைத்துக் காய் நகர்த்துவது தான் காரணம்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மறுசீர் அமைப்புக்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகள் இணைந்த பிறகு புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியே இல்லாமல் போனாலும் அதன் பிறகு நடந்த தேர்தல்களில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றவர் கந்தர்வகோட்டையை சார்ந்த தற்போதைய எம்.பி.ப.குமார். அவர் திருச்சியில் வழக்கறிஞராக பணியாற்றியதால் திருச்சியின் முழுநேரமாக அரசியல்வாதியாக மாறியதால் பொன்மலைபட்டியில் புதிய வீடு கூட கட்டி செட்டில் ஆனார். தற்போது திருச்சி மாநகர மா.செ. பொறுப்பும் சேர்ந்து விட மாவட்ட அரசியலில் அதிரடியாகச் செயல்படுகிறார்.

தற்போது நடக்க உள்ள தேர்தலில் இரண்டு முறை வெற்றிபெற்ற எம்.பி.குமார் கட்சித் தலைமை சொன்னால் மீண்டும் நிற்பது அல்லது அடுத்த சட்டமன்ற தேர்தலில் திருவரம்பூர் தொகுதியைக் குறி வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் கார்த்திக் தொண்டைமான், நெடுஞ்செழியன், திண்டுக்கல் ரத்தினம் மைத்துனரும் புதுக்கோட்டை மாவட்ட பாசறை நிர்வாகியுமான கருப்பையா, மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகி அருண்செந்தில்ராம், ஆகியோர் அ.திமுக.வில் சீட்டு வாங்க அவரவர் செல்வாக்கைப் பயன்படுத்தி கடுமையாக முயற்சி செய்கிறார்கள்.

முன்னாள் எம்.எல்.ஏவான கார்த்திக் தொண்டைமானுக்கு உள்ளூர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையே உட்கட்சி பகைமை இருப்பதால் கட்டாயம் விஜயபாஸ்கர் சிபாரி செய்யமாட்டார் என்று நினைப்பவர்
ஓ.பி.எஸ். மூலம் காய்நகர்த்தி வருகிறார். இதனால் புதுக்கோட்டை அரசியலில் புயல் வீசுகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் திருச்சியை தேமுதிக குறிவைத்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. திருச்சி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டால் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷின் நம்பிக்கையைப் பெற்ற பொதுப்பணித்துறை காண்டிராக்டர் ஏ.எம்.ஜி.விஜயகுமார், போட்டியிடுவர் என்கிறார்கள். காரணம் இவர் விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே விஜயகாந்த் ரசிகர்களால் தேர்தலில் களம் இறங்கியவர் என்பதாலும் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அவருக்குத் தான் இந்த முறை அதிக வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

 

அவருக்கு இல்லை என்றால் சுதீஷே நேரடியாகக் களம் இறங்கினால் வெற்றி தோல்வி எப்படி இருக்கும் என ஆய்வு நடத்தியிருக்கிறார்கள் ஆக இந்த முறை திருச்சியில் அ.தி.மு.க. நேரடியாகப் போட்டியில்லை என்பதே களம் நிலவரம் சொல்லும் சேதி. தேமுதிக எந்த கூட்டணியில் இருந்தாலும் திருச்சியில் தேமுதிக போட்டியிடும் என்று என்றே இரு கூட்டணிகளின் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. திருச்சியைக் குறி வைத்து காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வட்டமடிப்பதற்குக் காரணம் மலைக்கோட்டை மக்களின் மனசே காரணம்.

 

Leave A Reply

Your email address will not be published.